இனி கட்டட முடிவு சான்று இல்லாமல் இவற்றையெல்லாம் பெறலாம் – தமிழக அரசு புதிய உத்தரவு

இனி கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதி பெறலாம் என மின்சார வாரியம் புதிய உத்தரவு.

இனி கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதி பெறலாம் என மின்சார வாரியம் புதிய உத்தரவு.

நகராட்சி நிர்வாகத்துறை புதிய உத்தரவு:

unknown node

கட்டட முடிவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை பெறலாம் என நகராட்சி நிர்வாகத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டட விதிகள் 2019, விதி எண் 20ன் படி கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்று இன்றி மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வசதி உள்ளிட்ட முதலான இணைப்புகளை வழங்கலாம் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் நடவடிக்கை:

unknown node

நக்கராட்சி நிர்வாகத்துறை உத்தரவை தொடர்ந்து மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, கட்டட சான்று பெற்ற பிறகே இதுபோன்ற வசதிகளை வழங்குவதால், அவர்கள் குடியிருப்புகளுக்கு செல்வது அல்லது தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தொடர் புகார் எழுந்த நிலையில், தற்போது கட்டட முடிவு சான்றிதழ் பெறுவதற்கு முன்னதாகவே மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை வழங்கலாம் என நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விதிப்பு:

unknown node

இதனடிப்படையில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் (8070 சதுர அடி) பரப்பளவிற்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும், இதுபோன்று அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்த வசதியை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவை அமல்படுத்துவதால், இனி வரக்கூடிய காலங்களில் கட்டட முடிவு சான்று இல்லாமலேயே சொந்த்த வீடுகளோ, சொந்த தொழிற்சாலைகளுக்கும் அல்லது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வசதியை வழங்கலாம் என மின்சார வாரியம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

மின்சாரவாரிம் உத்தவு:

unknown node

இதன்மூலமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டக்கூடிய அனைத்து வீடுகள், தொழிற்சாலை கட்டடங்கள் அனைத்திற்கும் மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதி பெற கட்டட முடிவு சான்று கிடைக்கும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்சாரவாரியமும் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும், பொறியாளர்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

unknown node