ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு விருது..!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , தேனி மாவட்ட எம்.பி ரவீந்திரநாத் குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளனர்.நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோவில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பாராட்டு விழாவில் “தங்கத்தமிழ் மகன்” விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சிகாகோவில் நடைபெற்ற உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு “சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா “விருது கொடுக்கப்பட்டது.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ” தங்க தமிழ் மகன் “ விருதினைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது விருதாக “சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா” விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது விழாவில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025