சசிகலா வருகை ... இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ,ஈபிஎஸ் அவசர ஆலோசனை

O. Panneer Selvam and Edappadi Palanichamy will hold a consultative meeting with district secretaries and ministers at the AIADMK headquarters in Chennai at 5 pm today as Sasikala arrives in Chennai on the 8th from Bangalore.

சென்னை:பெங்களூருவிலிருந்து சசிகலா வருகின்ற 8 ஆம் சென்னை வரவுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள்,அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.கொரோனா தொற்று காரணமாக 11 நாட்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த 31 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு  பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார் .

சசிகலா சென்னை திரும்பும்போது அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .அவர் விடுதலையான நாளிலிருந்தே அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டும் அதிமுக நிர்வாகிகளை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர்.இந்நிலையில் இன்று மாலை அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர்கள்,அமைச்சர்களுடன் நடைபெற இருக்கும் கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.