சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை..!

Default Image

தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரம் அருகே உள்ள முதலிப்பட்டி சார்ந்தவர் பாண்டி(61).இவர் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி ஊருக்கு வெளியே பாண்டி நின்று கொண்டு இருந்தார். அப்போது 13 வயது மதிப்புதக்க மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர் வந்து உள்ளார்.
அந்த சிறுமியை பார்த்த பாண்டி சிறுமியிடம் பேசி அவரை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.பின்னர் அந்த சிறுமியை பாண்டி தனது வீட்டுக்கு கடத்தி சென்று உள்ளார்.
இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டனர். அப்போது பாண்டி அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார். இதை தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் பாண்டி மீது பலாத்காரம் செய்ததாகவும் , கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடியில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமார் சரவணன் பாண்டிக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்