கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் குளத்தில் சிக்கி, தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள்கள் ஷாமிலி மற்றும் ஷாலினி. மூவரும் ஈத்தாமொழி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல ஆம்னி காரில் பயணித்துள்ளனர். அப்போது கருங்கல் என்ற பகுதியில் கோணம் அருகே ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த குளத்திற்குள் சிக்கியது.
அதை பார்த்த பொதுமக்கள், உடனே காப்பற்ற முயற்சி செய்துள்ளனர். அந்த காரில் இருந்த ஷாலினி என்ற ஒரு மகளை காப்பாற்றியுள்ளனர். அதற்குள் கார் முழுவதுமாக குளத்திற்குள் மூழ்கியுள்ளது. பிறகு, தீயணைப்பு துறைக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காரை கயிற்றால் கட்டி மேலே எடுத்துள்ளனர். ஆனால், ராஜேந்திரன் மற்றும் ஷாமிலி இருவரும் காருக்குள் இறந்த நிலையில் கிடைத்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…