கொரோனா தடுப்பூசி திட்டம் -தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025