டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா! இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்கு

Australia have declared their 2nd innings at 312.Team India will now need 407 runs to win the 3rd Border-Gavaskar Test

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி  சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் ஜடேஜா 4, பும்ரா நவ்தீப் சைனி தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டை பறித்தனர். பின்னர், இறங்கிய இந்திய அணி  இரண்டாம்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 45 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்தனர்.நேற்று  3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில்  கம்மின்ஸ் 4, ஹேசில்வுட் 3, ஸ்டார்க் 1 விக்கெட்டை பறித்தனர். இதன் காரணமாக 94 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.தொடக்க வீரர்களாக இறங்கிய டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி இறங்கினர். இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் டேவிட் வார்னர் 13, வில் புகோவ்ஸ்கி 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின் இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் இருவரும் நிதானமாக விளையாடிய ரன்கள் சேர்த்தனர்.

3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 29 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் எடுத்தனர். இதனால், 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்து வந்தது. இன்று 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கிரீன் 84 ரன்கள்,ஸ்மித் 81 ரன்கள் அடித்தனர்.இதனால் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்திய அணியின் பந்துவீச்சில் சைனி , அஸ்வின் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.இதனைத்தொடர்ந்து 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.