ஓணம் பண்டிகை...தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா?

சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகக் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், ஓணம் பண்டிகையான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் 100 ரூபாய் அதிகரித்து 14,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 800 ரூபாய் அதிகரித்து 1,19,600 ரூபாய்க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி பழைய விலையிலேயே தொடர்ந்தது.

பின்னர் ஆகஸ்ட் 24ஆம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் அதிகரித்து 15,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 1,20,240 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதனையடுத்து, ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்து முறையே 15,010 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,20,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நன்னாளில் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் ஒரு கிராம் தங்கம் 15,010 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,20,080 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் பதிவாகவில்லை. கடந்த நேற்றைய தினம் வெள்ளி விலை கிலோவிற்கு பத்தாயிரம் ரூபாய் வரை அதிரடியாகக் குறைந்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இன்றும் வெள்ளி விலையில் எந்தத் மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஓணம் பண்டிகை...தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா?