ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் கனிமொழி!!!வைகோ உறுதி!!!

This news gives information about One thousand votes will win by winning the Kanimozhi Vaiko-thoothukudi kanimozhikku atharvaka vaiko

அன்பு தங்கை கனிமொழி க்குஆதரவாக வருகின்ற 22-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறேன்.

அன்பு தங்கை கனிமொழி  தூத்துக்குடியில்  ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என வைகோ கூறினார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.

தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் நேற்று  வெளியானது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தூத்துக்குடி தொகுதியில்  தி.மு.க சார்பில் கனிமொழி போட்டிடுகிறார்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று கனிமொழி சந்தித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ , அன்பு தங்கை கனிமொழி க்குஆதரவாக வருகின்ற 22-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறேன்.

திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் . அன்பு தங்கை கனிமொழி  தூத்துக்குடியில்  ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என வைகோ கூறினார்.