அவனியாபுரம் ஜல்லிகட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகம் நடத்த அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே சமரசம் ஏற்படாததால் அரசே போட்டியை நடத்துகிறது என்று ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் அருகில் உள்ள கிராம மக்கள், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மற்றொரு போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இந்த ஆண்டு ஜல்லிகட்டு நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் மூலமாக இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே கொரோனா பரவல் மத்தியில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…