தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவர்களை பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.
தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது.
வீட்டில் இருந்தபடியே படிக்க விரும்பினால் பெற்றோர் சம்மதத்துடன் படிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.