தமிழகத்தில் ஜனவரி 18 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு.!

The school education department has informed that the schools should be reopened during the hearing held in Tamil Nadu for 2 days.

பள்ளிகளை திறக்க வேண்டும் என 2 நாட்களாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் 70% பேர் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுத்தேர்வு என்பதால் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு முழுமையான பலனை தராது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.