திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் இன்று 6ம் கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீ வைகுண்டபுரம் மற்றும் திருசெந்தூர் போன்ற பகுதிகள் பரப்புரை மேற்கொண்டார். இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்பட்டார் என கூறியுள்ளார்.
எனவே, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மீது உண்மையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே திமுக அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறிய முதல்வர், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக தான் என்றும் தமிழக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். சட்டம் – ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதலிடம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த திட்டமும் செய்யவில்லை என திமுக குற்றசாட்டி வருகிறது. ஆனால, மத்தியில் இருக்கும் அரசு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…