இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நாட்டு மக்களுடன் உரையாற்றும் போது, சில திட்டங்களை அறிவித்தார். அதன்படி, அனைத்து மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு, தமிழக முதலவர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா துயர்துடைக்க நாட்டில் உள்ள 75% மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமைக்கும், கோவின் செயலியில் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்கம் செய்தமைக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…