குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு! நாம் தமிழர் கட்சிக்கு "விவசாயி" சின்னம் ஒதுக்கீடு!

குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்ய நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் முகவர் எதிர்ப்பு.

குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்ய நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் முகவர் எதிர்ப்பு.

சின்னங்கள் ஒதுக்கீடு:

unknown node

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரதான அரசியல் கட்சிகளுக்கு அவர்களுக்கு உரிய சின்னங்களை ஒதுக்கி தேர்தல் நடத்தும் அதிகாரி வருகிறார்.அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் . இளங்கோவனுக்கு கை சின்னம், தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழருக்கு விவசாயி சின்னம்:

unknown node

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடந்து அதிகாரி அறிவித்துள்ளார். குக்கர் சின்னத்தை 4 வேட்பாளர்கள் கோரியதால் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குலுக்கல் முறையில் கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்கு  குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு:

unknown node

ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே சின்னத்தை கோரியதால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்ய நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் முகவர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி முகவர் எதிர்ப்பு தெரிவித்ததால் குலுக்கல் முறை இன்றி அக்கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.