என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டுமே எப்படி சரியாகும் என ஓபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் தலைமையிலான அமர்வில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இறுதி விசாரணை:
அப்போது, வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதம் கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கு சம்மதமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிமுக தரப்பு:
பொதுச்செயலாளர் பதவி மட்டுமே தற்போது உள்ளது, ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி, தொண்டர்களை தயார் படுத்த வேண்டியுள்ளதால் பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தது எனவும் உயர்நீதிமன்றத்தில் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பு வாதம்:
இதன்பின், என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டுமே எப்படி சரியாகும் என ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கப்பட்டுள்ளது. எங்கள் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதாக கூறிய தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை. இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி முன் நடந்த விசாரணை குறித்து ஓபிஎஸ் தரப்பில் பிஎஸ் ராமன் வாதிட்டு வருகிறார்.