ஓபிஎஸ் மேல்முறையீடு மனு இறுதி விசாரணை; ஓபிஎஸ் வாதம்.!

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவின், இறுதி விசாரணையில் தன்னை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தியிருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவின், இறுதி விசாரணையில் தன்னை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தியிருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தள்ளுபடி:

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானம் குறித்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து,  ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் தனி நீதிபதி அமர்வு  மேல்முறையீட்டு மனுக்களை  தள்ளுபடி செய்தனர்.

மேல்முறையீடு:

இதனையடுத்து ஓபிஎஸ் அணியினர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஓபிஎஸ் அணியின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் கொண்ட இரட்டை நீதிபதி அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதியான இன்று  நடைபெறும் என ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ் வாதம்:

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார், இதன்படி அதிமுகவில் தான் நீடிப்பது கட்சியின் நலனுக்கு விரோதம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு எவ்வாறு கூறமுடியும் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிட தனக்கு தகுதியுள்ள நிலையில், தன்னை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தியுள்ளது எனவும் ஓபிஎஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை தொடங்கி இன்னும் நடைபெறுகிறது, இரு தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன…