அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளையும் விசாரணை.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி, ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே, அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளையும் விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று பி[பிற்பகல் தொடங்கிய நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில் ,கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிட தனக்கு தகுதியுள்ள நிலையில், தன்னை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்றார். அதிமுக பொதுக்குழு செல்லும் என தனிநீதிபதியின் தீர்ப்பு தவறு என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த நிலையில், உயர்நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு விசாரணை நடத்துகின்றனர்.