மனிதனை அழித்துவிடலாம், ஆனால் அவன் சிந்தனைகளை அளிக்க முடியாது – கனிமொழி!

மனிதனை அழித்துவிடலாம், ஆனால் அவன் சிந்தனைகளை அளிக்க முடியாது என பகத்சிங் பிறந்தநாளுக்கு கனிமொழி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் இருந்த புரட்சியாளருமாகிய பகத்சிங் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1907 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இன்றுடன் 113 வயது ஆகிறது. இந்நிலையில் இவரது பிறந்த நாளுக்கு பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் திமுக மக்களவையின் உறுப்பினராகிய கனிமொழி அவர்கள் இவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு மனிதனை நீங்கள் அழித்து விடலாம் ஆனால் அவனது சிந்தனையை ஒருபோதும் அழிக்க முடியாது என பகத்சிங் கூறிய வார்த்தைகளை பதிவிட்டு, பகத்சிங்கின் சிந்தனைகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்திருப்பதாகவும் பகத்சிங்கின் பிறந்த நாளில் அவரது சிந்தனைகளை முன்னெடுப்போம் எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
ஒரு மனிதனை நீங்கள் அழித்து விடலாம். ஆனால் அவன் சிந்தனையை நீங்கள் ஒருபோதும் அழிக்க முடியாது – பகத் சிங்.
பகத்சிங்கின் சிந்தனைகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்திருக்கிறது. பகத்சிங் பிறந்த நாளில் அவர் சிந்தனைகளை முன்னெடுப்போம்.#BhagatSingh pic.twitter.com/lN9rfG2lLL
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 28, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025