ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க இருந்தது ஓபிஎஸ்-க்கு தெரியும் – இபிஎஸ்

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டிரம்பின் ஆதரவாளர்கள் போல் நடந்து கொண்டார்கள் என அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ் தரப்பு வாதம்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டிரம்பின் ஆதரவாளர்கள் போல் நடந்து கொண்டார்கள் என அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ் தரப்பு வாதம்.

பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி விவாதிக்கப்பட உள்ளது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும், இதை அவர் மறுக்க முடியுமா? என உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பாக வழக்கு விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜூன் 23 கூட்டத்தில் கையெழுத்தான அறிவிப்பில் 3-7 வரையிலான தீர்மானங்கள் ஒற்றை தலைமை பற்றிய விவாதம். நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பது ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு பிரச்னையும் அல்ல. ஒருங்கிணைப்பாளர் இல்லாமலே ஜூலை 11 கூட்டத்தை அவைத்தலைவர் அறிவித்தார் என்பதுதான் ஓபிஎஸ்-க்கு பிரச்சனை.

ஜூலை 11 கூட்டத்தில் பதவிகள் நீக்கப்பட்டுவிட்டதால் அவை அன்றோடு முடிந்துவிட்டன. மேலும் 4 ஆண்டுகள் பொறுப்பு உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் வாதம் வைக்கப்பட்டது.

மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டிரம்பின் ஆதரவாளர்கள் போல் நடந்து கொண்டார்கள். கேப்பிட்டல் ஹில்லில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் புகுந்து சூறையாடியதைப் போல அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூறையாடினார்கள் என்றும் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தது.