பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை அகற்ற உத்தரவு!

புதிய இணைப்புக்கான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு.

TNEB

புதிய இணைப்புக்கான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை அகற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை புதுப்பிக்க கூடாது என்றும் புதுப்பிக்க கோரினால் அவரை புதிய விண்ணப்பதாரராகவே கருத வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதாவது, பயன்பாட்டில் இல்லாத இணைப்பை பயனாளர் புதுப்பிக்க கோரும்போது, அவரை புதிய விண்ணப்பதாரராக கருத வேண்டும். அவரிடம் இருந்து நிலுவைத் தொகை மற்றும் புதிய இணைப்புக்கான கட்டணத்தை வசூலித்த பிறகே மின் விநியோகம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.