நெல்லையில் 2 மணிநேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 18 பேர் உயிரிழப்பு!

At Tirunelveli Government Medical College Hospital, 18 corona patients died of suffocation due to lack of oxygen for two hours.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 18 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் சூழலில் பொதுமக்கள் என்ன செய்வதென்று அறியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கை வசதிகள் இருக்கிறது.

அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் ஆக்ஸிஜன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டது என கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த மருத்துவமனைக்கு கங்கைகொண்டன் சிப்காட், வண்ணாரப்பேட்டை, மகேந்திரகிரி, இஸ்ரோ மையம் ஆகிய பல இடங்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு மாலை 6 மணிக்கு ஆக்சிஜன் வினியோகம் சீராக நடைபெற்று உள்ளது. இருப்பினும் இந்த இரண்டு மணிநேர ஆக்சிஜன் பற்றாக்குறையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 18 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.