ஆக்சிஜன் ரயில்.., 2 சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!

ஒரிசாவில் இருந்து திரவ ஆக்சிஜனையும் கொள்முதல் செய்ய ஒரியா, இந்தி தெரிந்த உயர் அதிகாரிகளை அரசு நியமனம் செய்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இரண்டாவது அலை காரணமாக மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரிசாவில் இருந்து திரவ ஆக்சிஜனையும் கொள்முதல் செய்ய ஒரியா, இந்தி தெரிந்த உயர் அதிகாரிகளை அரசு நியமனம் செய்துள்ளது.
சேலம் மாவட்டம் வனபாதுகாவலர் ஏ.பெரியசாமி மற்றும் வேளாண்த்துறை அதிகாரி நிஷாந் கிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவில் உள்ள ரூர்கோலா மற்றும் கலிங்கா நகரில் இருந்து தினமும் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டேங்கர் வேகன்கள், ரயில் மூலம் இதுவரை தமிழகத்திற்கு 110 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்துக் இரண்டு வாரத்திற்கு ரூர்கோலா புவனேசுவரத்தில் இருந்து ஆகிய கொண்டு வர 2 சிறப்புகள் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.