20 சதவீதம் வரை ஈரப்பத நெற்பயிரைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 20 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் மழையால் நெல் பயிர்கள் பாதிப்படைந்திருந்தது. பின்னர் இந்த பாதிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வு நடத்தியிருந்தது.
இதில் நெற்பயிர் நிர்ணயித்த அளவை விட ஈரப்பதம் அடைந்திருந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பை 20% வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக மத்திய அரசு பயிர்கள் கொள்முதல் செய்வதற்கான நிர்ணயிக்கப்பட்ட 17% ஈரப்பதம் என்பது அவசரக்காலங்களில் 19% வரை உயர்த்த மாநில அரசுக்கு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.