சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் துணை முதல்வர் என்ற பெருமையைக் கொண்டவர் தான் மு.க.ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் ஓ.பன்னேர்செல்வம் தமிழகத்தின் 2-வது துணை முதல்வராக பதவியேற்றார். இப்படி இருக்கையில், தமிழகத்தின் அடுத்த துணை முதலவர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் நேற்று அதற்கான பதிலும் கிடைத்தது. அதன்படி, தமிழகத்தின் 3-வது துணை முதல்வராக உதயநிதி […]
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. தற்போது, நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தலையிட முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதத்தில், ” கட்சிக் […]
சென்னை : தமிழக அரசியலில், பெரிய கேள்வியாக இருந்தது என்னவென்றால், ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்வி தான். இந்த கேள்விக்கு நேற்று, முன்தினம் உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதல்வர் என பதில் கிடைத்தது.நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள, உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். வாழ்த்து மழையில், […]
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில் கிடைத்தது. தமிழகத்தில் 3வது துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பில் இருக்கும் போது அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு முதன் முறையாக கொடுக்கப்பட்டது. 3வது முறையாக துணை முதல்வர் : அடுத்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா […]
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நேற்று முன்தினம் அரங்கேறியது. அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், தமிழக அமைச்சரவை 5-வது முறையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், நாசர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். […]
சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சினிமாவை சேர்ந்த பிரபலங்களில் யாரெல்லாம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தனுஷ் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்ற சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” […]
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. நீண்ட நாட்களாக திமுகவினர் எதிர்நோக்கி காத்திருந்த ‘ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘ எனும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. 3 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டன. 3 அமைச்சர்கள் நீக்கம் செய்யப்பட்டு 2 புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. முக்கிய மாற்றங்கள்… இந்த அமைச்சரவை மாற்றத்தில் மிக முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டதும், அமைச்சர் பொன்முடி […]
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த ‘துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘ எனும் அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சரவையில் இருந்து முன்பு நீக்கம் செய்யப்பட்டிருந்த நாசர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், புதிதாக கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நான்கு […]
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. தமிழக அமைச்சரவையில் இரண்டு புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். அதேநேரம் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, நாசர் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். நான்கு அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டன. தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறையும், அமைச்சர் மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், அமைச்சர் கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேலாண்மை […]
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து வந்தது. அந்த வகையில், தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நாளை நியமிக்கப்படவுள்ளார். மேலும், மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜியும் பதவியேற்கவுள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்.29) பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் வைத்து பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மாளிகை […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் புஸ்ஸி ஆனந்த். அதன் ஒரு பகுதியாக, மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (செப்.28) தென் சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சென்னை சூர்யா பார்ட்டி ஹாலில், மாவட்ட நிர்வாகிகள் உடன் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில், ஆலோசனை கூட்டம் […]
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலர் இது குறித்து விமர்சித்து பேசி வருகின்றனர். அதில் பலர் கூறியது சர்ச்சையாகவும் மாறி பின் தணிந்தது. அந்த வகையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், இந்த லட்டு விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். வெற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை […]
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இங்கு அமைய உள்ள இந்த ஆலையில் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணிப்பேட்டையில் அமையவுள்ள இந்த நிறுவனம் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, […]
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்தின்போது, அதிர்வுகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உணரப்பட்டதாககவும், வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலையை சுற்றியிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. 4 மணி […]
நாமக்கல் : நேற்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்-களில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் , கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார் , கொள்ளையடித்த பணம் உள்ளிட்டவற்றை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் தப்பி வந்துவிட்டனர். அந்த கொள்ளையர்கள் பற்றி தமிழக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது . பின்னர், சினிமா பாணியில் நாமக்கல் தேசிய நெடுசாலையில் குமாரபாளையம் அருகே அந்த கண்டெயினரை போலீசார் மடக்கி பிடித்தனர். வெப்படை அருகே, கொள்ளையர்களை பிடிக்க முயல்கையில் […]
கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பாப்பம்மாள் 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்தார். இதற்காக, இவருக்கு 2021-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, பாப்பம்மாளின் காலில் விழுந்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர், தான் விவசாயம் கற்ற […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற பேச்சுக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. அதற்கேற்றாற் போல , நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய “மாற்றம் இருக்கும் , ஏமாற்றம் இருக்காது” என்பது போல , விரைவில் மேற்கண்ட மாற்றங்கள் இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரம். இந்த அறிவிப்புகள் இன்னும் […]
சென்னை : கடந்த ஜனவரியில் விசிக கட்சியில் இணைந்து குறுகிய காலத்திற்குள் விசிகவின் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிற்கு வந்தவர் ஆதவ் அர்ஜுனா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திமுக பற்றி பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார். “விசிக கூட்டணி இல்லாமல் வடமாநிலங்களில் திமுக ஜெயிக்க முடியாது.”,” சினிமாவிலிருந்து வந்தவர்களே துணை முதல்வர் (உதயநிதி ஸ்டாலின்) ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக்கூடாதா.?” என்று அவர் பேசிய […]
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை தமிழக போலீசார் துரத்தி பிடித்து, அப்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி உமா கூறுகையில், கேரளா மாநிலம் திருச்சூரில் கொள்ளையடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு இந்த கும்பல் தப்பி வந்துள்ளது என்றும், அவர்களை பிடிக்க முயலும் போது ஒரு கொள்ளையன் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப […]
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு என இது போன்ற கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதாகக் கூறி […]