சென்னை :தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்புஸ்ஸிஆனந்த்.
அதன் ஒரு பகுதியாக, மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (செப்.28) தென் சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சென்னை சூர்யா பார்ட்டி ஹாலில், மாவட்ட நிர்வாகிகள் உடன் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய என்.ஆனந்த், “எந்த நாளாக இருந்தால் என்ன? ஊக்கத்துடன் வந்து விடுவார்கள். இன்றைக்கு சனிக்கிழமை சம்பள நாள். அப்படி இருந்தும் இந்த கூட்டத்தை பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது.
தலைவன் தளபதி அழைத்தால் போதும், கூட்டம் தானாக சேர்ந்து விடும்” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி தர வேண்டும். தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பாஸ் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம்.
மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்படும். மாநாட்டிற்கு வரும் தொண்டர்களும் மக்களும் சட்டத்திற்கு உட்பட்டு கட்சிக்கும் விஜய்க்கும் எந்த களங்கமும் ஏற்படாமல் ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டும்.
தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள மாதிரியை மட்டுமே மாநாட்டுக்கான பேனர், சுவரொட்டிகளில் பயன்படுத்த வேண்டும்” என அறிவுறித்தியுள்ளார். இவ்வாறு தவெக மாநாட்டின் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் விஜய் என்ன பேசவுள்ளார் என்பதை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கிறார்கள்.
unknown node