செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன் , ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர்.

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. தமிழக அமைச்சரவையில் இரண்டு புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். அதேநேரம் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, நாசர் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். நான்கு அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டன.
தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறையும், அமைச்சர் மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், அமைச்சர் கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேலாண்மை துறையும், அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறையும் மாற்றம் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் துறை கொடுக்கப்பட்டது.
புதியதாக அறிவிக்கப்பட்ட அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் தற்போது பதவியேற்று உள்ளனர். அமைச்சரவையில் புதியதாக இடம் பெற்ற கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கும், மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கும் செந்தில் பாலாஜி மற்றும் நாசர் ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025