தயார் செல்போன் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட 6-ம் வகுப்பு பயிலும் சிறுவன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, மார்த்தாண்டம் பட்டியை சேர்ந்த சீனிமுருகன் – ஜோதிமணி தம்பதியினரின் இரண்டாவது மகன் பாலகுரு. இவர்களது மூத்த மகன் மதன் மற்றும் பாலகுரு இருவரும் பெற்றோரின் செல்போனில் விளையாட ஆர்வம் காட்டி வந்துள்ளனர். இந்நிலையில், சீனிமுருகன் வேலைக்கு சென்றுள்ளார். ஜோதிமணி திருமண விழாவுக்காக வெளியூர் சென்றுள்ளார். பின் வீடு திரும்பிய ஜோதிமணி, அவரது இரண்டாவது மகன் பாலகுரு தூக்கில் […]
டிடிவி தினகரனோ அல்லது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினோ சொல்வது போல அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை. அமைச்சர் உதயகுமார் அவர்கள், திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் வழிபாடு நடத்தினார். வழிபாட்டிற்கு பின் செய்தியாளர்க்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வழிகாட்டுதலோடு கட்சியும், ஆட்சியையும் சிறப்பாக நடக்கிறது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நிர்வாக திறன், கொரோனா தடுப்பு என எல்லாவற்றிலும் முதல்வர் எடப்பாடி பாலனிசாமி முதலிடத்தில் உள்ளதாகவும், டிடிவி […]
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில், மகராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும், மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதில் இருந்து தவறி வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள், இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக 450-க்கும் குறையாமல் கொரோனா […]
கிராமத்தில் இருந்து நகரம் வரை இனி ஏழை மக்களுக்கு வீடு இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே 2 சென்ட் நிலம் வாங்கி சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டி தரும். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி அவர்கள், ரூ.1503 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். அதன் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழக அரசின் குடிநீர் திட்டத்தால், தமிழகத்தில் இனி குடிநீர் பஞ்சமே இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், […]
இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில், தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில், தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையில், துணைமுதல்வர் ஓ.பி.எஸ் 10-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால், பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், சட்டமன்ற தேர்தல் […]
தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.ரேஷன் கடைகளில் நியமிக்கப்படும் புதிய ஊழியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு. அரசாணையின்படி ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 5,000-இல் இருந்து ரூ. 6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ. 8,600 – ரூ. 29,000 வழங்கப்படும். இதேபோல் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 4,250-இல் இருந்து ரூ. 5,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ. 7,800-ரூ. 26,000 […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என்றும், மக்கள் பிற மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸ் பாதிப்பு மெதுமெதுவாக குறைந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருவதால், இந்த வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் […]
புதுச்சேரியில் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த்துக்கொண்டு இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள் என வைகோ தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததால் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு முதல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்த்து வருகின்றன. அருணாச்சலப் பிரதேசம், […]
நாராயணசாமியால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், முதல்வர் நாராயணசாமியால் தான் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது என்றும் காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, தென் மாநிலத்திலும் பாஜகவுக்கு வெற்றி தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தற்போது இந்தியாவில் இல்லை, ஒரு சில இடங்களில் மட்டும்தான் உள்ளது. புதுச்சேரியில் […]
மொழி வளர கைகொடுங்கள் என்று தமிழக அரசிற்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் மூன்றரை லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அங்கு தமிழர்களுக்கும், தமிழுக்கும் பலவித முன்னுரிமைகள் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக அறிவித்து கனடா மக்கள் அதை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என கூறியுள்ளார். கனடாவில் முதல் இடத்தில் உள்ள டோரண்டோ பல்கலைக் கழகம் கடந்த பல வருடங்களாக […]
காமராஜர் பேத்தி மயூரி கண்ணன், ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற்னர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ம் தேதி வரை கொடுக்கப்படும் விருப்ப மனுவை பெற்று விண்ணப்பிக்கலாம் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி,இதுவரை 4,384 விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காமராஜர் பேத்தி […]
மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு கடந்த 2019-ல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒற்றை தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்கக்கோரியும், புதிய தேர்வு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு தொடந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதியதாக கேங்மேன் நிரப்ப […]
தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்கி பல்கலைக்கழக நிர்வாக குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெறும் என்றும் மே மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பாக்குமட்டை தட்டை வாங்கி, அதிமுக தொண்டர்களோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார். மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இக்கூட்டத்தில் […]
தமிழக அரசுயலில் கூட்டணி அமைப்பதே பெரிய போராட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், தமிழகத்தில் இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைக்கக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதாகவும் கூறியுள்ளார். எங்களை பிடிக்காதவர்கள் 2, 3 சீட்டுகள் என்பார்கள், அவர்கள் கூட்டணியில் சேர்வதற்கே தகுதி இல்லாதவர்களாக இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தளவில் கூட்டணியில் இணைவது என்பதே ஒரு […]
சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், துணைநிலை ஆளுநரின் […]
ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இது மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகி இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தி தேர்தல் களத்திற்கு செல்கிறோம் என கூறினார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் எந்த முயற்சியையும் செய்யவில்லை. எங்களுக்கு அதுபோன்று செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சசிகலாவுடன் தனியாகக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை […]
மு.க. ஸ்டாலினால் எந்த காலத்திலும், நம்மிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க முடியாது. புதுக்கோட்டையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை, அதிமுக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது என்றும், உளவு செய்யும் நேரத்தில் ஊர் சுற்றிவிட்டு, […]
ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இந்நிலையில், ராஜேஷின் தலையை ஓரிடத்திலும், உடலை ஓரிடத்திலும் இருந்து போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், போலீசார் விசாரணையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த ராஜேஷுக்கு […]
மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம். தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிமுக அரசு. ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது […]