மக்களவை தேர்தல்: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் வெறும் 296 வாக்குளை பெற்று 7-வது இடத்தில் பின் தங்கி இருக்கிறார். முதலிடத்தில் 61,089 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் டிஎம் கதிர் ஆனந்த் இருக்கிறார்.
மக்களவை தேர்தல் : தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் தருமபுரி தொகுதியில், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 100174 வாக்குகள் பெற்று 15369 முன்னிலையில் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக, திமுக வேட்பாளர் மணி 84805 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் அசோகன் 69710 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
மக்களவை தேர்தல்: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் திமுக முன்னிலை வகுக்கிறது. விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 46500 வாக்குகள் பெற்று 2149 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதற்கு அடுத்தபடியாக, மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) – 44351வாக்குகளும், ராதிகா சரத்குமார் (பாஜக)18185 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் : தமிழக மக்களவை தொகுதியான சிதம்பரத்தில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் அவர்கள் 48,962 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக போட்டியிட்ட எம்.சந்திரஹாசன் 38,076 வாக்குகள் பெற்று -10,886 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். மேலும், இவர்களை தொடர்ந்து 3-வதாக 15,582 வாக்குகள் பெற்று -33,380 வாக்குகள் பெற்று பாஜக சார்பாக போட்டியிட்ட கார்த்தியாயினி பின்னடைவில் இருந்து வருகிறார். விடுதலை சிறுத்தை கட்சியின் மற்றொரு தொகுதியான விழுப்புரத்தில் ரவிக்குமார் […]
மக்களவை தேர்தல்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உட்பட இந்தியா முழுக்க உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 16 ஆயிரம் வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் வினோஜை விட 7,800 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 7,600 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன் விட […]
மக்களவை தேர்தல் : திமுக சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி 17,787 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான சிவசாமி வேலுமணி 5351 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் நட்சத்திர வேட்பாளரான கனிமொழி, சிவசாமி வேலுமணியை விட 12,436 வாக்குகள் என்ற பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
மக்களவை தேர்தல்: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு தற்போது ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். கன்னியாகுமரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 5,500 வாக்குகள் […]
மக்களவை தேர்தல்: திமுக கூட்டணியில் தமிழகத்தில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மதுரை தொகுதியிலும், சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளனர். காலை 9.30 மணி நிலவரப்படி திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் 17 ஆயிரம் வாக்குகள் பெற்று சுமார் 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் 4000 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சரவணனை விட 500 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
543 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு வருகிறது. அதைப்போல, தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல்கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக சார்பில் போட்டியிட்டுள்ள டி.ஆர்.பாலு முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் இருக்கிறார். நாம் தமிழர், தமாகா வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
மக்களவை தேர்தல் : மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் என்ற அறிவித்திருந்தனர் . அதனை தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கப்பட்டது. அதன்படி காலை 8.05 நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
சென்னை : செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவேற்காட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஆண்டனி கிளெமென்ட் ரூபின், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், வேலை அல்லது விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் போது அவற்றை பராமரிப்பு மையங்களில் கட்டணம் செலுத்தி சேர்க்கின்றனர். ஆனால், நாட்டில் முறைப்படுத்தப்படாத பராமரிப்பு மையங்கள் […]
சென்னை: இன்று கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை திமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையை அடுத்த மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மொத்தம் இன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு மதுராந்தகம் வடக்கு ஒன்றிய சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டி இருந்தது. திமுக நிர்வாகி சுந்தர் குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்தார்.
அதிமுக: நேற்று முன்தினம் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பெரும்பாலும், திமுக வெல்லும் என்றும் அடுத்த இடத்தில் அதிமுக பாஜக இருக்கும் என கூறப்பட்டது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் பிரச்சரத்தில் இலக்கு நிர்ணயித்து மக்களை சந்தித்து அவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றோம். இப்போது வந்துள்ள கருத்து கணிப்புகள் பார்த்து வயிறு எரிகிறது. 2 நாளாக சாப்பிடவில்லை. மன உளைச்சல் ஏற்படுகிறது என […]
சென்னை : தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்பொழுது, துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி […]
மதுரை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சுயேட்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]
சென்னை : நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறவுள்ளன. 543 தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றன. இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை (04.06.2024) காலை 8 மணிக்கு தொடங்கப்படவுள்ளன. மதியம் 12 மணிக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நாளை 39 மையங்களுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் […]
சரத்குமார் : நடிகரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டுள்ளார். இதனையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே தேர்தலின் போது தீவிரமாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்பட்டு முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகளும் கடந்த சனிக்கிழமை வெளியானது. இந்த நிலையில், […]
சென்னை : மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3ஆம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாடுவது வழக்கம். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் மரியாதை செய்தார். அவருடன், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட […]
டோல்கேட்: இந்தியா முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணிகளானது டோல்கேட் கட்டண வசூல் வாயிலாக ஒப்பந்ததாரர் முறைப்படி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டண உயர்வானது மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணமானது தேர்தல் நேரம் என்பதால் செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில் […]
மக்களவை தேர்தல்: இந்தியா முழுக்க உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் (ஜூன் 1) நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்கி உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில், பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றி இருந்தது. […]