சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2200 ஏக்கர் பரப்பளவில் இந்த விண்வெளி ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு […]
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் மின் உபயோகமானது உச்சத்தை எட்டியது. தமிழ்நாடு முழுவதும் மின் தேவை அதிகபட்சமாக 21,000 மெகா வாட்டாக அதிகரித்தது. அதற்க்கு முக்கிய காரணம் கோடை காலத்தில் வெயில் தாக்கத்தால் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி தான். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கோடை மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. […]
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. – தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் மறந்து இருந்த பழைய நினைவுகளை புது திட்டங்கள் மூலம் அதனை செய்லபடுத்தி உள்ளார் பிரதமர் மோடி என பேசினார். அவர் கூறுகையில், நாம் அனைவரும் , ரயிலை விட விமானத்தில் சென்றால் தான் வேகமாக ஒரு […]
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் மதுரை மதிச்சியம் பகுதியில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, மதிச்சியம் பகுதியில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த […]
சென்னை: சென்னையில் இன்று வெயிலுடன் நாள் தொடங்கினாலும், மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று வெயிலுடன் நாள் தொடங்கினாலும், மழை பெய்யும் என்றும் கணித்துள்ளார். இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தற்போது நாம் பார்ப்பது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான், அடுத்த […]
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 5 நாட்டுப் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான இலங்கை மீனவர்கள் தற்போது […]
சென்னை: தமிழகத்திற்கு மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கான உரிய அளவிலான காவிரி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மை வாரியத்திற்கு உரிய பரிந்துரைகளை காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்து உரிய பரிந்துரைகளை காவிரி ஒழுங்காற்று குழு , காவிரி மேலாண்மை வாரியத்திற்கு அளிக்கும். அவ்வாறு இன்று 96வது […]
சென்னை: 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் விரைவில் உதவித்தொகை வழங்கவுள்ளார். கல்வி விருது விழா என்ற பெயரில் கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார். அந்த வகையில், இந்த ஆண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகிய நிலையில், மாணவ மாணவிகளை விரைவில் சந்திக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், […]
சென்னை: சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார், சேலம், சென்னை, திருச்சி என பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், ஏற்கனவே கோவை கிரைம் போலீசார் முன்னதாக ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், அடுத்து திருச்சியில் பதியப்பட்ட வழக்கிற்காக நேற்று சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் இருந்து […]
சென்னை: திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மே 20ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலில் அதிகபட்சமாக காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “இந்திய வானிலை […]
சென்னை : செங்கல்பட்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர் கிராமத்தில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 20 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]
சென்னை: வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு 19ம் தேதி வரை, சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்காக மொத்தம் 376 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி, விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பழுதாகி நின்றது. இதன் காரணமாக பின்பே வந்த ஆம்னி பேருந்து ஒன்று லாரி மீது மோதியதால் அதிகாலை கோர விபத்து ஏற்பட்டது. […]
சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இம்மாவட்டங்களில் டெங்குவுக்கான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் தேதி ‘தேசிய டெங்கு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தளவு விழிப்புணர்வு இருந்தாலே போதுமானது, தம்மை டெங்குவில் இருந்து நம்மை பாதுகாத்துக் […]
சென்னை : மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு சுற்றுசூழல் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 1,977 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை சுற்றுச்சுவர் தவிர வேறு ஏதும் கட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் […]
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் கல்பாக்கத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில், புதுச்சேரி சென்று திரும்பிய நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் 5 பேரும், சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கார் இரும்பு ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த […]
சென்னை : விழுப்புரம், கே.ஆர்.பாளையம் கிராம கிணற்றில் இருந்தது மனித கழிவு அல்ல, தேனடை என்று அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் மூலம் அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு கிராமத்தில் உள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் இந்த கிணற்றின் அருகிலும், உள்ளே சில அடி ஆழத்தில் இருந்த சுவரிலும் […]
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே கே.ஆர்.பாளையத்தில் குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணை குழு ஒன்றரை ஆண்டுகள் விசாரணை செய்தும் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. அதற்குள் அடுத்தாக ஓர் முகம்சுழிக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில்நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கஞ்சனூர் அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் ஓர் […]
சென்னை: அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது என போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக, சில மோட்டார் வாகனங்கள் தானாக தீ விபத்துக்குள்ளாகி வருவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG, LPG மாற்றங்கள் செய்யகூடாது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம் என அரசு கூறியுள்ளது. வாகன உரிமையாளர் இவ்வகை செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து போக்குவரத்து ஆணையம் விளக்கம் […]
சென்னை : புதுக்கோட்டை கடல் வழியாக ரூ.10 கோடி மதிப்பில் தங்கம் கடத்தபட்டதாக 5 மீனவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக தங்க கடத்தல் நடைபெறுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில், சோதனை மேற்கொண்டதில், புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 கிலோ தங்கம் சிக்கியது. புதுக்கோட்டை மாவட்ட கடல்பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த 10 […]