சென்னை : தமிழக மின்சார வாரியம் தற்போது தமிழ்நாடு மின் நுகர்வோருக்கு ஒரு வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கட்டணம் செலுத்தும் முறையை எளிதாக்குவதற்கு இனி பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் மின் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்ற வசதியை அறிமுகம் செய்தது. மேலும், இது 500 யூனிட் அளவுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இப்படி வாட்ஸ் அப் செயலி […]
சென்னை : பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரை பேச்சுகள் மலிவானதாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார். கடந்த மே 20-ஆம் தேதி ஒடிசாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது பற்றி பேசியது பேசுபொருள் ஆகி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இந்திய […]
சென்னை : வாக்குகளுக்காக தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். ஒடிசா மாநிலத்தில் (மே20) நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது பற்றி பேசியது பேசுபொருள் ஆகி உள்ளது. அதில் பேசிய பிரதமர் மோடி” நம்மளுடைய வீட்டு சாவி காணாமல் போய்விட்டது என்றால் நாம் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால், 6 ஆண்டுகளாக ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி […]
சென்னை: யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். உணவு சம்பந்தமான ர்வியூக்களை பதிவிட்டு வரும் பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. ஆம்,இது குறித்து யூடியூபர் […]
சென்னை : தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 5 நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தொடர் மழை காரணமாக கடந்த 5 நாட்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக பேர் உயிரிழப்பு பேரிடர் மேலாண்மைத்துறை தகவலை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். கனமழை இருப்பதன் […]
சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கவும்; பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்த்தும் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” தமிழ் நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தங்களுடைய பயணங்களை […]
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த முன்னாள் அரசியல் பிரமுகர், திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதை பொருள் கடத்தப்பட்டதாகவும், இவர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டன. டெல்லியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன் போதை பொருள் […]
சென்னை : பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வெடி விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் கார்த்திக் என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. அதைப்போல, வெடிவிபத்தில் காயமடைந்தவர் பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் எனவும் தெரியவந்துள்ளது. காயமடைந்த வேல்முருகன் தற்போது மணப்பாறை மருத்துவமனையில் […]
சென்னை: அதிமுகவிற்குள் பிளவு எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார். அதிமுகவிற்குள் பிளவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், குறிப்பிட்ட பத்திரிகை தினமும் எங்களை விமர்சிக்கும் வகையில் செய்திகளை பதிவிடுகிறது. அதிமுகவில் , புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு பிறகு நாங்கள் […]
சென்னை: சாவர்க்கரின் 5 பெருமைகள் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அண்மையில், மும்பை சென்று அங்கு அண்ணல் அம்பேத்கார் நினைவிடம், சாவர்க்கர் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு சென்று வணங்கினர். அதில், சாவர்க்கர் நினைவிடத்திற்கு சென்றுவிட்டு அவர் பேசுகையில், சாவர்க்கர் துணிச்சலுக்கும், நாட்டின் மீது அசையாத அர்ப்பணிப்புக்கும் அடையாளமாக இருந்தார் என்றும், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், அறிஞர் மற்றும் சிந்தனையாளராகவும் இருந்தார் என்றும், […]
சென்னை: மின் சேவைகள் பற்றியும் அறியவும், விண்ணப்பிக்கவும் புதிய இணையதள முகவரியை TANGEDCO அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியமான TANGEDCO தலைமையின் கீழ் tangedco.org எனும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் மின்சார வாரியம் தொடர்பான செய்திகள், மத்திய மாநில அரசுகளின் மின் திட்டங்கள், இணைப்பு பெற விண்ணப்பங்கள் என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த tangedco.org இணையத்தளமானது பல்வேறு சேவைகளை வழங்குவதால் அதில் ஒரு லிங்கை கிளிக் செய்தால் அது இன்னொரு லிங்கை திறக்கும் […]
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை, கொடைக்கானல், தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 19 ஆம் தேதி) முதல் (மே 21 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் […]
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 2 […]
சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ‘i am waiting’ என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அடுத்ததாக சினிமாவை விட்டு அரசியல் பயணத்தில் முழுவதுமாக ஈடுபடஉள்ளார். மேலும், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ள […]
சென்னை : வார இறுதி நாட்களில் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்காகவும் சூப்பரான ஒரு ஆஃபரை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படவுள்ளது. இந்த ஒரு நாள் சுற்றுலா அட்டை 100 ரூபாய் தான். 100 ரூபாய் செலுத்தி இந்த சுற்றுலா அட்டையை வாங்கிக்கொண்டு மெட்ரோ […]
சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒருநாள் ஊதியத்தை ரூ.319ஆக உயர்த்தியது தமிழக அரசு. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் , நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உடலுழைப்பு சார்ந்த வேலைகள் 100 நாட்களுக்கு வழங்கப்படும். இதன் ஒருநாள் ஊதியம் மாநிலம் சார்ந்து வேறுபடும். இந்த 100 நாள் வேலைத்திட்ட ஒருநாள் ஊதியம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் மாதம், மத்திய ஊரக வளர்ச்சி துறை 100 […]
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில் 4 கட்ட மக்களவை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. தென்மாநிலங்களில் தேர்தல்கள் நிறைவுபெற்றதை அடுத்து, தற்போது வடமாநிலங்களில் அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நிறைவு பெற்றாலும், மாற்றுக்கட்சிகளின் மீதான விமர்சனங்களை அரசியல் தலைவர்கள் முன்வைக்க தவறுவதில்லை. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் செய்லபடுத்தப்பட்டு வரும் இலவச […]
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்தும் இருக்கிறது. இந்த சூழலில், தொடர் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாகதடை விதித்துள்ளது. ஏற்கனவே, […]
சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் மீது கோவை, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து வந்த […]
சென்னை : குற்றாலம் பழைய அருவியில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு தென்காசி பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நெல்லையைச் சேர்ந்த சிறுவன் (17) அஸ்வின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு இருக்கும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக தென்காசி பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென […]