அதிமுக: ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு தனது கண்டனங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வாயிலாக பதிவு செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை ஓர் இந்துத்துவா தலைவர் என கூறினார். மேலும், 2014 தேர்தல் சமயத்தில் பாஜகவா , ஜெயலலிதாவா என்று பார்த்தல் இந்துக்களின் தேர்வு ஜெயலலிதாவாக இருந்தார் என்றும், அவர் தன்னுடைய […]
அண்ணாமலை: உடுப்பியில் எஸ்.பியாக பொறுப்பேற்ற போது தனது கட்டுப்பாடிற்குள் தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருந்தேன் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மிக தீவிரமாக அரசியல் களத்தில் ஈடுப்பட்ட வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பின்னர் தற்போது முதன் முறையாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அண்ணாமலை அரசியல் களம் தாண்டி தனது காவல்துறை பணி அனுபவங்களையும் […]
குரூப் 2 : டிஎன்பிஎஸ்சி செப்டம்பர் மாதம் நடத்தும் குரூப் 2, 2A தேர்வின் புதிய பாடத்திட்டம் தற்போது அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு துறையில் டிகிரி அளவிலான பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் வாயிலாகவும் அந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வு தேதிகளை கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி TNPSC வெளியிட்டது. வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தம் 2030 […]
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் தன்னிடம் அதிகாரம் உள்ளவர்கள் பேசியதாகவும் அதனால் இறுதி விசாரணையை இன்றே மேற்கொண்டேன் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். பெண்காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி கோவை போலீசார் பிரபல யூ-டியூர் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். அதே போல திருச்சி, சேலம், சென்னையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்து இருந்ததாகவும் வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து பல்வேறு வழக்குகள் சவுக்கு […]
பிக்மி : கர்ப்பிணிப் பெண்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பிக்மி (PICME) என்றால் என்ன? பிக்மி நம்பர் என்றால் என்ன? இந்த நம்பரை எப்படி பெறுவது? இதனால் என்ன நன்மைகள் போன்றவற்றை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க… அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் கண்காணிக்க தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்புதான் “PICME” ஆகும். கர்ப்ப கால பரிசோதனைக்காக தனியார் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் அணைத்து பெண்களும் இந்த PICME இணையதளத்தில் […]
சிலந்தி ஆறு: மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதாக எழுந்த புகாரின் பெயரில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவது குறித்து விசாரணை நடைபெற்றது. தென்மண்டல […]
சென்னை: பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் இன்று காலை கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து திருப்போரூர் நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற பிணை அளித்துள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் கடந்த 20ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், ராஜேஷ் தாஸ் கடந்த 18ஆம் தேதி அடியாட்களுடன் தையூரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வந்து […]
சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு மற்றும் வெப்பம் அதிகரிப்பு காரணமாக, ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. ஆண்டுதோறும், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து […]
சென்னை: காவலாளியை தாக்கி வீட்டிற்குள் நுழைய முயன்றதாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் கேளம்பாக்கம் காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி 3 ஆண்டுகள் தண்டனை பெற்றவர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரையில் சென்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை வாங்கியுள்ளார். இதற்கிடையில், ராஜேஷ் தாஸ் மனைவியாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா […]
சென்னை: குற்றாலம் பழைய அருவியில் நீர்வரத்து சீரானதால் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளான பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவியருவி, பழையகுற்றால அருவி, தேனருவிகளில் சுற்றுலாப் பயணிகள் பலரும் குளித்து மகிழ்வது வழக்கம். ஆனால், இங்கு எப்போது வெள்ளம் வருவது என சொல்ல முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக பெய்த காரணமாக, கடந்த 17ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், […]
சென்னை: கூகுள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது. இந்திய அளவில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனமான கூகுள், பிக்சல் ஸ்மாட்போன் உற்பத்தியை ஐபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் உடன் இணைந்து தமிழ்நாட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுலகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட […]
சென்னை: ரேஷன் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டிய கூட்டுறவுத்துறை, பணி நேரத்தில் ஒழுங்காக கடைகளை திறக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் […]
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேட பார்ப்பதாக கூறி தென் சென்னை பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் அவரது X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முதலைமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி ஒட்டு மொத்த தமிழர்களையெல்லாம் அவமதித்துவிட்டதாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழிசை அவரது X தளத்தில், “தமிழக முதலைமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி […]
சென்னை: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி வரும் வேளையில், சில தினங்களாக வெடிகுண்டு மிரட்டல், கொலை மிரட்டல் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. நேற்று டெல்லி உள்துறை அமைச்சக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்ததை அடுத்து, அதிகாரிகள் சோதனை செய்ததில் அந்த மிரட்டல் போலி என தெரியவந்தது. அதனை அடுத்து, இன்று காலை சென்னை, […]
சென்னை: குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். பிரபல யூடியூபரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இர்பான் என்பவர் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தன் குழந்தையின் பாலினம் குறித்து தாது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் நேற்றும் இன்றும் பெரியதாக பேசப்பட்ட நிலையில், சிசுவின் பாலினத்தை சமூக […]
சென்னை: காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் அவர்களின் ஊழல் வீடியோ வெளியிடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவீட் செய்துள்ளார். ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசா ஜெகநாதர் ஆலையத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டது என கூறினார். இந்த கருத்துக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனங்களை பதிவு செய்தனர். பிரதமர் மோடி பேசியது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு வந்தால் தமிழ் […]
சென்னை: தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு தொடர்பான புதிய வீடியோ வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக மறு உத்தரவு வரும் வரை குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது நாளாக இன்று குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டவுடன், சுற்றுலா பயணிகள் […]
சென்னை: ராகுல் காந்தியை பாராட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவிட்ட டிவீட் அழிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பற்றி பதிவிட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை தற்போது நீக்கி மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளார் செல்லூர் ராஜு. செல்லூர் ராஜு தனது டிவிட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி வீடியோ பதிவிட்டு அதில், நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் […]
சென்னை: கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினார். பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக […]
சென்னை: சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா KP.2 பற்றி மக்கள் பயப்பட வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ள்ளது. 2020ஆம் ஆண்டு உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பேரலை பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தியது. இதற்கான தடுப்பூசிகளையும் பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தற்போதும், அவ்வப்போது புதுபுது கொரோனா வைரஸ் பல்வேறு பரிமாணங்களில் உருவாகி கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த கொரோனா புதிய […]