சென்னை :வார இறுதி நாட்களில் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்காகவும் சூப்பரான ஒரு ஆஃபரை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படவுள்ளது.
இந்த ஒரு நாள் சுற்றுலா அட்டை 100 ரூபாய் தான். 100 ரூபாய் செலுத்தி இந்த சுற்றுலா அட்டையை வாங்கிக்கொண்டு மெட்ரோ ரயிலில் அளவற்ற பயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம். மேலும், அட்டையை வாங்குவதற்கு முன்பு நீங்கள் ரூ.150 செலுத்தவேண்டும். பிறகு உங்களுக்கான ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும்.
அந்த அட்டையை வாங்கிக்கொண்டு நீங்கள் போகும் இடங்களுக்கு சென்று திரும்பி வரும்பொழுது சுற்றுலா அட்டையை திருப்பி ஒப்படைத்த பின், நீங்கள் செலுத்திய 150 ரூபாயில் இருந்து உங்களுக்கான 50 ரூபாய் வைப்பு தொகையும் திரும்பி கொடுக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த அசத்தலான ஆஃபரால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
unknown nodechennai metrorail
