சென்னை:சென்னையில் இன்று வெயிலுடன் நாள் தொடங்கினாலும், மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று வெயிலுடன் நாள் தொடங்கினாலும், மழை பெய்யும் என்றும் கணித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தற்போது நாம் பார்ப்பது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கும் என்பதால் மெயின் பிக்சர் இன்னும் தொடங்கவே இல்லை.
சென்னையில் இன்று வெயில் தொடங்கி, மீண்டும் அற்புதமான காலநிலைக்கு மாறும், எனவே இன்றும் உங்களது ரெயின்கோட்டை எடுத்துச் செல்லுங்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
unknown nodeஏற்கனவே, தமிழ்நாட்டில் இன்று முதல் 20ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
