திருமங்கலம்:ராம் இவர் திருமங்கலம் அருகேயுள்ள முத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் . இவர் ஒடிசா மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் பிளஸ் 2 முடித்துள்ள இவர் தாயுடன் முத்தப்பன்பட்டியில் வசித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மதுரை செல்வதாக தாயிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 9 பவுன் நகை அணிந்திருந்த அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில் தந்தை ராம் கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் […]
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ ,தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் பாஜக சொல்வதை அதிமுக அப்படியே கேட்டு நடப்பது தான், என குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, “திமுக – காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கருத்திற்கும், வழக்கறிஞர் பராசரன் கருத்திற்கும் தான் வேறுபாடு இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தவறு செய்ததாக காங்கிரஸ் எப்போதும் கூறாது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மை கண்டிப்பாகத் தேவை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் […]
ஈரோட்டில் ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் குடும்பத்துடன் பயணித்தனர். இவர்கள் பயணித்த அதே முன்பதிவு பெட்டியில் சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த 57 வயது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரும் கோவையில் ஏறியுள்ளார். ரயிலில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, சென்னை பயணிகளுடன் வந்த 9 வயது சிறுமியிடம் பிரேம் ஆனந்த் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். […]
திருச்சி:வரும் 24ம் தேதி முதல் திருச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக ஏப்ரல் 21ம் தேதி (நேற்று) மதியம் முதல் நாளை (23ம் தேதி) வரை திருச்சி அஞ்சலக கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலங்களில், திருச்சி தலைமை அஞ்சலக இரவு அஞ்சலகம் உட்பட எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யமுடியாது.அனைத்து தபால் அலுவலகங்களும் வழக்கம்போல மீண்டும் 24ம் தேதி முதல் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும். விரைவு தபால், பதிவு தபால் அனுப்ப […]
திருச்சி: பற்பசை மற்றும் லக்கேஜில் ரூ.11லட்சம் மதிப்பிலான தங்கத்தைமறைத்து சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த வாலிபரை திருச்சி ஏர்போர்ட்டில் சுங்கத்துறையினர் பிடித்தனர்.சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு ஸ்கூட் டைகர் விமானம் நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக திருச்சி சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததன் அடிபடையில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை பரிசோதித்தனர். அதில் சிவகங்கையை சேர்ந்த முகமதுமீரா என்ற வாலிபரின் உடமைகளை பரிசோதித்தபோது, பேஸ்ட் மற்றும் அவரது லக்கேஜில் […]
திருச்சி: வருகின்ற 23ம் தேதி(நாளை)திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மனித சங்கலி அறப்போராட்டம் நடைபெற இருகின்றது. இது குறித்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர்அறிக்கை வெளியிட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்த தன்னுடைய சுயநல அரசியல் காரணங்களால் அமைக்காமல் காலம் தாழ்த்தி மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி […]
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் லிப்ட் வசதியுடன் கூடிய அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் துவங்கப்படும் என கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு அனைத்துவிதமான மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது என்றும் வயது முதிர்வின் காரணமாகவே அது இறந்ததாகவும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆளுநர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுறிச்சியில் 298.10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணைமின்நிலையத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆளுநருக்கு அதிகாரமில்லை எனக் கூறிவிட்டு அவரிடமே மனு அளிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்… மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ,12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்தாலும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். யூடியூப் நேரலையில் மக்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். விரைவில் மய்யம் சார்பில் விசில் எனும் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு குற்றங்கள் குறித்து அபாய ஒலி எழுப்பி சுட்டிக்காட்டப்படும் என தெரிவித்தார். தாம் அரசியலுக்கு வந்தது ஒரு நொடியில் எடுத்த முடிவல்ல என்றும், பல ஆண்டுகளாக யோசித்து எடுத்தது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல் […]
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுத் தருவதில் தமிழக அரசு சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக கூறினார். காரைக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சிகள் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-வது கட்டமாக நேற்று மாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் திறந்தவேனில் நின்று பேசும்போது கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு எடுக்கும் முடிவால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாகி விடும். கர்நாடக அரசு மேலும் 2 அணைகளை கட்டினால், நமது மாநிலத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு, காவிரி மேலாண்மை வாரியம் […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், ஆறுமுகநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், வக்கீல்கள் மகேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சற்குரு வரவேற்று பேசினார். தமிழகத்தில் 30 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர். காமராஜர் பிறந்த […]
போலீஸ் பாதுகாப்பு இயக்குநர் பாரதிராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போடப்பட்டுள்ளது. ஊடகத்தில் பணிபுரியும் பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாரதிராஜா, காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகம் முன் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகம், தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
சென்னை வானிலை ஆய்வு மையம்,தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. உள் கர்நாடகாவில் இருந்து லட்சத்தீவுகள் வரை வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் ஏற்பட்டுள்ள தொலைதூர சலனங்களால் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கடல் அலைகளின் சீற்றம் […]
4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ,மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் பெட்ரோல், டீசல் இன்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் டெல்லியில் பெட்ரோல், டீசலில் 19 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2012ம் ஆண்டுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் சிரமம் கருதியும், பணவீக்கம், விலைவாசி உயராமல் இருக்க உடனடியாக உற்பத்தி, கலால்வாரி உயர்வைக் குறைக்க வேண்டி மத்திய அரசுக்கு கடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றபின் பிரதமர் […]
திருமண நிகழ்ச்சிகள் இப்போது மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான முறைகளில் நடக்கின்றன. அழைப்பிதழில் இருந்து- மணமக்கள் உடுத்தும் ஆடை, மேடை அலங்காரம், ஊர்வலம், உணவு எல்லாமுமே காலத்துக்கு தக்கபடியான மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், திருமண முறையே மாறி புதுமைபடைத்துக்கொண்டிருக்கிறது. மணமக்களின் குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்ததுபோல் திருமண முறைகளை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியோடு மணவிழாவை நடத்தி இல்லறத்தில் இணைகிறார்கள். அந்த வகையில் மக்களை கருத்துடனும், களிப்புடனும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, திருக்குறள் வழி திருமணங்கள். தேனி அருகே […]
தொடர்ந்து 3வது நாளாக,அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக, தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விருதுநகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் […]
அமைச்சர் செங்கோட்டையன் ,பள்ளிக்கல்வித்துறையில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கல்விக் கண்காட்சியை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய செங்கோட்டையன், மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை ; முயற்சி நின்றாலும் மரணம் தான் என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
2 கடைகளில் நூதன முறையில் ராமநாதபுரத்தில் உரிமையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, கல்லாப்பெட்டியை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த வியானன்று சக்கரைக்கோட்டையில் உள்ள மரியா கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்துள்ளனர். உரிமையாளர் சுந்தரவேலிடம், பெட்ரோல் பங்க்கின் அருகே ஒரு பெண் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகக் கூறியுள்ளனர். சுந்தரவேலிடம் சொல்லச் சொன்னதாகவும் அவர்கள் பதற்றத்துடன் கூறியுள்ளனர். அதிர்ந்து போன சுந்தரவேல், கடையை அப்படியே போட்டுவிட்டு ஊரில் உள்ள எல்லா பெட்ரோல் […]
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ,தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் டி.என்.பி.சி.க்கு அளிக்கப்பட்டிருப்பதாக உதயகுமார் குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.