தமிழகத்தில் மொத்தம் 5.87 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அவர்களில் ஆண் வாக்காளர்கள் –சுமார் 2.93 கோடி பெரும், பெண் வாக்காளர்கள் –சுமார் 2.99 கோடி பெரும், மூன்றாம் பாலினம் –சுமார் 5,040 பெரும் உள்ளனர் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து: தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பதற்காக தியானம் இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். எங்களால் கட்சிப் பதவியை பெற்றவர், தற்போது குடும்ப ஆட்சியை எதிர்ப்பதாக கூறுகிறார்எனக்கூறி விமர்சித்தார். அதேபோல் ஒருசில அமைச்சர்களின் சதியால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன்.தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு தேவையற்றது எனவும் கூறினார்.அதிமுகவில் என்னை துணைப் பொதுச்செயலாளராக பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணி தான்எனவும் […]
அதிமுக அரசின் பெரும்பான்மை குறித்து சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ்-டிடிவி இடையே காரசார விவாதம் நடைபெற்றது . அதிமுக அரசின் பெரும்பான்மை, உட்கட்சி விவகாரம் பற்றி பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. ஓ.பி.எஸ்., தங்கமணி மற்றும் டிடிவி.தினகரன் இடையேயான காரசார விவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் சுமார் அரை மணி நேரம் சட்டப்பேரவையில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். அரசியல் சார்ந்தவைகளை பேரவையில் விவாதிக்க வேண்டாம் என சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அரைமணி நேரமாக நடந்த காரசாரமான விவாதம் அவை குறித்து இருந்து […]
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவையில் முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார். இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேறினால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பளம் ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்கும். அதாவது இருமடங்காக அதிகரிக்கும். அதே போல் […]
தமிழகத்தில் வி.ஏ.ஓ.க்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி அறிவித்துள்ள வி.ஏ.ஓ.க்கள் காலவரையற்ற போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அரசு சான்றிதழ் கோரும் பல விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில் போராட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என அந்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளில் போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தின் நிலுவை தொகை கொடுக்க வேண்டுமென்பதும் ஒன்று. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். விதி எண் […]
பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கோயம்பேட்டில் அமைக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளுக்கான கவுண்ட்டரில் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக சிறப்பு பேருந்துகள் இயங்குமா? என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. எனவே பொங்கலைக் கொண்டாட வெளியூர் செல்வோரில் பெரும்பாலானோர் தனியார் பேருந்துகளையே நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் பேருந்து நிறுவனங்கள், […]
மத்திய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிற்சங்க ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். வங்கி, மின்சாரத்துறை, எல்.ஐ.சி., துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஊழியர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, உள்ளிட்ட 12 தொழிற்சங்கத்தினர் சேப்பாக்கத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பாக, போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]
போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு என புகார் எழுந்தால், அதுகுறித்து விசாரிக்கும் வகையில் தனியாக பதிவேடு ஒன்றைப் பராமரிக்க வேண்டும் என 2011ம் ஆண்டு பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். போலி ஆவணப்பதிவு எனத் தெரிய வந்தால் மாவட்ட பதிவாளர்கள் விசாரணை நடத்தி, பத்திரப் பதிவை ரத்து செய்யும் நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், பத்திரப்பதிவில் முறைகேடு இருந்தால், பதிவாளர்களே விசாரணை நடத்தி ரத்து செய்யக்கூடாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் […]
பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும், அதே நேரத்தில் ஊழியர்கள் மீது நீதிமன்ற உத்தரவில்லாமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]
விலங்குகள் நலவாரியச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துபவர்களுக்கு, காளைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து முன்கூட்டிச் சுற்றறிக்கை அனுப்பி அவற்றைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் விலங்குகள் நலவாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஆய்வு நடத்துவதற்கு வசதியாக, மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு நடைபெறுமிடங்களின் பட்டியலை அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விலங்குகள் நலவாரியத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மிட்டலை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட குழுவினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த […]
சென்னை, கேரளா உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை தியாகராயநகரில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர் .வரி ஏய்ப்பு, விற்பனை விவர கணக்குகளில் முறைகேடு செய்ததாக புகார். சேலம் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரிச் சோதனை. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை முதலே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் வருமான வரித்துறை சோதனை. திருநெல்வேலிக் கிளையிலும் காலை […]
இன்று கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் , காட்டுமன்னார் கோவில், குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் லேசான தூரல் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் இயக்கம். மாவட்டத்தில் 380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள 1,150 அரசுப் பேருந்துகளில் 590 பேருந்துகள் இயக்கம். மாநகர் பகுதியில் 56 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம். புறநகர் பகுதிகளில் 53 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன மதுரை மாவட்டத்தில் 70 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம். 16 பணிமனைகளில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கம். 920 பேருந்துகளில் […]
மாநிலத்தின் 13 கடலோர மாவட்டங்களில் 3.42 லட்சம் குடியிருப்புகளை கட்டுவதற்காக ரூ.26,575 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் இழப்பு ஏற்படாமல் இருக்க,அங்கு வாழும் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக குடிசை சுத்திகரிப்பு சபையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு படி 5.85 லட்ச குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என்றும் இதில் 1.89 லட்ச குடியிருப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இதற்காக ரூ.7,499 கோடி […]
ஜனவரி 12ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து கேரளா கொச்சுவேலிக்கு, முழுவதும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கம் எனவும்,ஜனவரி 12ம் தேதி காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் கொச்சுவேலியை இரவு 10.50க்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை :தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வண்ணார் பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி திடீர் நகரில் 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 4 ரவுடிகள் தப்பியோடியுள்ளனர். கணவன் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த 4 ரவுடிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் இன்று தமிழக அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிமுக கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாளாக இன்று நடந்து வரும் சட்டமன்ற பேரவை கூட்டத்தில் இருந்து ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்துள்ளார். இது குறித்து வெளியில் வந்த தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தற்போதுள்ள அரசு மெஜாரிட்டி அரசு என அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் கூற முயன்ற போது எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் நான் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றேன். தகுதி நீக்கம் குறித்தும் பேச முற்பட்டேன். ஆனால் […]