உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போக்குவரத்து ஊழியர்களின் வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைத்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியான பின்னரே அடுத்தகட்ட முடிவு என தெரிவித்துள்ளார் சௌந்தர்ராஜன். நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் தொழிற்சங்க சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அரசிடம் ஆலோசித்து பிற்பகலில் […]
இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு இன்று மதியம் ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம் . போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.தொழிற்சாங்கத்தின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது.ஊதிய உயர்வு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து பேச்சு நடத்த தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.போக்குவரத்து ஊழியர்கள் மீதான கிரீமினல் வழக்குகளை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. source: www.dinasuvadu.com
தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது … கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 10 செ.மீ., சீர்காழியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.. source: www.dinasuvadu.com
தொடர்ந்து 17வது நாளாகத் தொடரும் பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காற்று மாசுபாட்டிற்கு பட்டாசுகள் தான் காரணம் என்றும் இந்தியா முழுக்க பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், விற்பனையாளர்கள் யாரும் பட்டாசுகளுக்கான ஆர்டர் கொடுக்க முன்வரவில்லை. இதனால் பட்டாசு தொழில் முடங்கியுள்ளதாகவும், வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் 26ஆம் தேதி முதல், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தைத் தொடங்கியுள்ளனர். போராட்டத்தின் […]
டிடிவி தரப்பிலிருந்து ஆளுநருக்கு செங்கோட்டையனை தமிழிக முதலைவராக்க கோரி மனு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு யாரை..? முதல்வராக்க வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு டிடிவி தரப்பிலிருந்து செங்கோகோட்டையனை முதல்வராக்க கேட்டுக்கொண்டதாக பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி: சாலை போக்குவரத்து அலுவலகத்தில் வாகன எண் பதிவுக்கு வந்த போது விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இவர் டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தகக்கது.
ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2வது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது சொத்து மற்றும் வரவு,செலவு ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வெளியூர் செல்ல வழித்தடங்கள் அறிவித்துள்ளது தமிழக அரசு .தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பொங்கலை முன்னிட்டு இன்று முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் செயல்படும் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
நமக்கு ஜல்லிகட்டை பற்றிய அறிமுகம் தேவை இல்லை .ஏனென்றால் தமிழனின் வீர விளையாட்டுகலில் ஒன்றான ஜல்லிகட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு ஆகும் . ஆனால் ஜல்லிகட்டு தான் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட வார்த்தை…தை புரட்சியின் மூலம் மீட்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு புகழ்பெற்றவை. இங்கு தான் வாடிவாசல் அமைத்து ஜல்லிகட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. பொங்கல் திருநாள் […]
உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனலாக் முறையிலான ஒளிபரப்பிற்கு கேபிள் டிவி கட்டணத்தை உரிய தேதிக்குள் செலுத்த தவறிய ஆபரேட்டர்களுக்கு அபராதத் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அசல் நிலுவைத் தொகை முழுவதையும் 3 தவணைகளுக்குள் செலுத்திவிட்டால், கடந்த அக்டோபர் மாதம் வரையிலான அபராதத் தொகை […]
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது.அதேபோல் தூத்துக்குடி உட்பட கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.
ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் சி.ஐ.டி.யூ , தொ.மு.ச உட்பட 23 தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்டமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இப்போராட்டத்தினால் போக்குவரத்து வசதியின்றி பயணிகள் தவிக்கின்றனர்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரை யாரெல்லாம் சந்தித்தார்கள் என்ற விபரத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையில் ஜெயலலலிதா சிகிச்சை பெற்ற போது அவரை யாரெல்லாம் சந்தித்துள்ளனர் என்ற தகவலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன் ராவ், […]
எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் இரு மடங்காக உயர்த்த சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது ரூ 55,000 ஆகும். அதனை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்துள்ளது. அதே போல் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ.2,50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியமும் ரூ.20,000 ஆக அதிகரிக்கும். இதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை […]
யுபிஎஸ்சி தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று காணலாம்.
தமிழகத்தில் மொத்தம் 5.87 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அவர்களில் ஆண் வாக்காளர்கள் –சுமார் 2.93 கோடி பெரும், பெண் வாக்காளர்கள் –சுமார் 2.99 கோடி பெரும், மூன்றாம் பாலினம் –சுமார் 5,040 பெரும் உள்ளனர் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து: தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பதற்காக தியானம் இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். எங்களால் கட்சிப் பதவியை பெற்றவர், தற்போது குடும்ப ஆட்சியை எதிர்ப்பதாக கூறுகிறார்எனக்கூறி விமர்சித்தார். அதேபோல் ஒருசில அமைச்சர்களின் சதியால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன்.தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு தேவையற்றது எனவும் கூறினார்.அதிமுகவில் என்னை துணைப் பொதுச்செயலாளராக பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணி தான்எனவும் […]
அதிமுக அரசின் பெரும்பான்மை குறித்து சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ்-டிடிவி இடையே காரசார விவாதம் நடைபெற்றது . அதிமுக அரசின் பெரும்பான்மை, உட்கட்சி விவகாரம் பற்றி பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. ஓ.பி.எஸ்., தங்கமணி மற்றும் டிடிவி.தினகரன் இடையேயான காரசார விவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் சுமார் அரை மணி நேரம் சட்டப்பேரவையில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். அரசியல் சார்ந்தவைகளை பேரவையில் விவாதிக்க வேண்டாம் என சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அரைமணி நேரமாக நடந்த காரசாரமான விவாதம் அவை குறித்து இருந்து […]
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவையில் முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார். இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேறினால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பளம் ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்கும். அதாவது இருமடங்காக அதிகரிக்கும். அதே போல் […]
தமிழகத்தில் வி.ஏ.ஓ.க்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி அறிவித்துள்ள வி.ஏ.ஓ.க்கள் காலவரையற்ற போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அரசு சான்றிதழ் கோரும் பல விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில் போராட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என அந்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.