நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, யாருக்கு சினிமா பிரபலங்கள் தங்களது ஆதரவினை அளிப்பார்கள் என்பது தான் மிக பெரிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர்.சியிடம் செய்தியாளர்கள் “உங்கள் ஆதரவு யாருக்கு..? ” என கேட்டுள்ளனர். அதற்கு”என் ஆதரவு முழுக்க முழுக்க ரஜினிக்கு தான்” என அவர் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பொருட்கள் விநியோக்கிக்கப்படும் எனவும்,இந்த பொங்கல் பொருள்களில் 250 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
கதிரவன் என்பவன் உலகத்தின் அடிப்படை இயக்க ஆற்றலாக இருக்கிறான். ஒரு பிண்டம் (உடம்பு) இயங்க வேண்டுமானால் வெப்ப ஆற்றல் தேவை. ஓர் அண்டம் (உலகம்) இயங்க வேண்டுமானால் கதிரவ ஆற்றல் தேவை. கதிரவன் இன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது. கல் தேரின் வேறு எந்தப் பாகத்திலும் கதிரவர்களை வைக்காமல், சக்கரத்தில் ஆரக்கால்களாகக் கதிரவ மூர்த்திகளை வைத்ததன் நோக்கமே, உலகங்களின் இயக்கத்துக்குக் காரணியாகக் கதிரவன் இருக்கிறான் என்பதுதான். எனவேதான் நமது பண்பாட்டில் கதிரவ வழிபாட்டுக்கு மிக […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செல்வம் என்பவர் மனு அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.சண்முகம், கே.எம்.பாஷா, பால்வசந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை நியமிக்க தொழிற்சங்கங்கள் தங்களது தரப்பின் மூலம் கோரிக்கை வைத்துள்ளன.
பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் சாலை பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்முறை திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. விபத்து இல்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அவ்வப்போது […]
கன்னி ராசிக்காரர்களே ! இந்த வாரம் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாகப் பேசுவது நல்லது. தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் ஸ்தானத்தை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் வரும். […]
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும். அதிகக் கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குக் கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க […]
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். தனாதிபதி சூரியன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது ஏழாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். மற்றவர்கள் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்களிடம் பகை நீங்கும். வீண் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அறிவிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையில் அந்த நோட்டிஸிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் மத்தய சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் புதன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மை கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடிச் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் […]
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.அஷ்டமத்துச் சனி நடந்தாலும் ராசிநாதன் சஞ்சாரம் மிக அனுகூலமாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். ராசியைச் செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் […]
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பேரிட மேலாண்மை குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி ரசல் ஜோய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,கேரளா, தமிழகம், மத்திய அரசு சார்ந்த உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற வேண்டும் எனவும் அதேபோல் 2 மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து பேரிடர் மேலாண்மை திட்டத்தில் செயல்பட வேண்டும். முல்லை பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை ஆய்வு செய்ய […]
மேஷ ராசிக்காரர்களே ! இந்த வாரம் மற்றவர்களுடன் இருந்த பகை மறையும். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதன் மூலம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். சஞ்சலமான மனநிலை அகலும். தனாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யத் தொடங்குவதால் தர்ம சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் […]
புதுச்சேரி : சட்டமன்ற நுழைவு வாயிலை மறித்து அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசனா, பாஸ்கர் ஆகியோர் திடீர் தர்ணா செய்து வருகின்றனர். மாதாந்திர இலவச அரிசி, பொங்கல் இலவச பொருட்கள் வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்று நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1956ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் சங்கரலிங்கனார் 75நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்ததைக் குறிப்பிட்டார். 1967ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், 1969 ஜனவரி 14ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதையும் […]
மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்ய மீண்டும் முடிவு செய்யப்பட்டு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது . தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யும் நடைமுறை ஏற்கனவே இருந்து வந்தது. இதற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், தலைவரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் மசோதா, கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், மாநகராட்சி மேயரை நேரடியாக மக்களை தேர்வு செய்யும் பொருட்டு […]
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகி 3 வாரங்கள் கழித்து, இன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் கர்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச […]
சொகுசு கார் இறக்குமதி செய்து முறைகேடுகளில் ஈடுபட்டவர் நடராஜன். இந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கணவர் நடராஜன் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மாநகராட்சி மேயர்,நகராட்சி மேயர்,பேருராட்சி தலைவர் ஆகியோரை மக்களே தேர்வு செய்யும் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. ஏற்கனவே இம்மாதிரியான முறைதான் இருந்தது,அப்போது அந்த முறையை நீக்கிட கோரி 2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நேரடி தேர்தல் முறையில் இருந்து மறைமுகத் தேர்தல் முறைக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.