தனியார் பேருந்துகள் பல நேரங்களில் மற்ற வாகன ஓட்டிகள் பயப்படும் அளவிற்கு தறிகெட்டு வேகமாக செல்கின்றன. அதனால் பல நேரங்களில் விபத்துக்குள்ளகின்றன. அப்படி அடிக்கடி நடக்கிறது. ஆப்படி ஒரு சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பந்தாரபள்ளியில் தனியார் பேருந்து தனது கட்டுபாட்டை இழந்து ஒரு வீட்டுக்குள் புகுந்தது. அதில் 3 பேர் காயமடைந்தனர். உடனே காயமடைந்த அந்த 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலிசாருக்கு […]
குரூப் ‘பி’ – குரூப் ‘சி’ – குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான போட்டித் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் பாரபட்சமாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆயிரக்கணக்கில் தேர்வாவதாகவும், 2016-ல் 111 தமிழக மாணவர்களே ஒருங்கிணைந்த பட்டதாரிஅளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறப்பிட்டுள்ளார். தமிழகத்தின் மத்திய துறைகளில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றிய பின், வட மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு பணிமாறுதலில் செல்வதால் […]
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த டி.டி.வி தினகரனின் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது, “தனிக்கட்சி துவங்கவுள்ளதாக தினகரன் தெரிவித்தவுடன் ஓ.பி.எஸ் உடனடியாக பணம் இருக்கும் வரை அவர் கட்சி நடத்துவார், இறுதியில் அவருடன் 10 பேர் கூட இருக்கமாட்டார்கள் என கூறியுள்ளார். பணம் வைத்துக்கொண்டா ஓ.பி.எஸ் தனது தர்மயுத்தத்தை தொடங்கினார், அந்த பணம் தீர்ந்தவுடன் இ.பி.எஸ் உடன் இணைந்து கொண்டாரா. தினகரன் இல்லையென்றால் இவர் யார் […]
சொகுசு கார் வாங்கிய வழக்கில் அமலபால் போலீசில் சரணடைந்தார் .. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மற்ற மாநில சொகுசுகார்களை பதிவு செய்வது அதிகரித்து வந்தது. சொகுசு கார்களை வாங்கும் பிரபலங்கள், அதனை வேறொருவரின் பெயரில் புதுச்சேரியில் பதிவு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மலையாளர் நடிகரும் எம்.பி-யுமான சுரேஷ்கோபி, நடிகர் ஃபகத் பாசில், நடிகை அமலாபால் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு […]
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு! ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து இராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தாமிரபரணி நதியில், அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள், தாமிரபரணியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அமாவாசை நாட்களில் […]
கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் குளித்து மகிழ்ந்த மக்கள் உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர். பகவதி அம்மன் கோவிலிலும் தரிசனம் செய்தனர். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர்சிலைக்கு செல்ல காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவிடாமல் படகுசேவை நடைபெறுகிறது. சபரிமலையில் மகரஜோதி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்களும் கன்னியாகுமரிக்கு வந்தனர். காணும்பொங்கலையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணைப்பூங்காவில் மக்கள் கூட்டம் […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன ஜல்லிக்கட்டுப் போட்டிகள். கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த இராச்சாண்டார் திருமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 காளைகளும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். பாத்திரங்கள், சைக்கிள், தங்க காசு, பணம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் பாதுகாப்பாக நின்று பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த 2 வீரர்களுக்கு அந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனையில் […]
மேதா பட்கர் மற்றும் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிபண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இதில் பேசிய மேதா பட்கர், நகர மயமாக்கல் மற்றும் தொழில் முதலீடுகளால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படாமல், வஞ்சிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய ஜிக்னேஷ் மேவானி, மக்கள் இயக்கங்களுக்கு, மோடி அரசால் ஆபத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார். தமிழக மக்கள், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கொள்கைகளில் செல்ல வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக […]
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளியின் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். 12 ஆண்டுகளுக்கு பின், நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில், புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயமாக அரசுப்பள்ளியில் தான் சேர்க்கவேண்டும் என்ற ஆந்திர அரசின் உத்தரவை போன்று, தமிழக அரசு உத்தரவிடுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், அது அவர்களின் தனி உரிமை […]
தமிழர் திருநாள்… தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். சௌரம் (சூரிய வழிபாடு), சைவம் (சிவ வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு) என ஆறு வகையான வழிபாட்டு முறைகள் இங்கே உள்ளன. இவற்றில் ஒன்றை பின்பற்றி, அதன்படி ஒரே தெய்வத்தின் திருவடியை நாடி வழிபடுபவர்கள் உண்டு. ஆனால், ஆறு வகை வழிபாட்டுக்காரர்களும் ஏற்றுக் கொண்ட ஒரே […]
குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சரை நீக்குங்கள் என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார். இன்று அதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “சென்னையில் குட்கா, பான்மசாலா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு நடத்திய சோதனைகளில் ரூ.250 கோடி அளவிற்கு சட்ட விரோதமாக குட்கா வர்த்தகம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவரங்கள் வெளியாகின. தற்போது, போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையில் டி.ஜி.பி, அப்போதைய முதல்வர் […]
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை வெறும் நாடகம் என முன்னால் மத்திய அமைச்சர் சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஏர்செல் – மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘சென்னை உட்பட பல பகுதிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் […]
ஏர்செல் – மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர் . டெல்லி, சென்னை உட்பட கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏர்செல் – மேக்ஸிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்புடைய வழக்குகளுக்காக, கடந்த ஆண்டும், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது […]
நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு” என தனது பதிவிட்டு ட்விட்டரின் மூலமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு. — Kamal Haasan (@ikamalhaasan) January 13, 2018
சென்னையில் இருந்து மட்டும் இரண்டு நாட்களில் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் இருந்து பயணிகள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால் பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் கோயம்பேடு […]
ஒவ்வொரு பண்டிகைகளுக்கு பின்னணியிலும் சுவாரசியமான புராணக் கதைகள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொங்கல் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? ஆம், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட பண்டிகை வந்துவிட்டது. பொங்கல் என்றாலே சந்தோஷம் தான். இருக்காத என்ன? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழும் தமிழர் பண்டிகையல்லவா? பொங்கல் என்றாலே குழந்தைகளுக்கு ஞாபகத்தில் வருவது சர்க்கரைப் பொங்கல், கரும்பு, புத்தாடை, முக்கியமாக விடுமுறை. பெரியவர்களுக்கு, முக்கியமாக விவசாயிகளுக்கு, அது தங்கள் வாழ்வாதாரத்தைப் போற்றி, சூரிய […]
பிப்ரவரி முதல் தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் ரூ.2.17 கோடி செலவில், ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி வழங்க திட்டம் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 314 முழு நேர நூலகங்களில் ரூ.2 கோடி நிதி உதவியில் கணினிமயமாக்கப்படும். மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு மானியம் ரத்தால் ரேஷன் கடைகளில் உளுந்து வழங்க இயலவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் . இதற்குமுன் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ரேஷன் கடைகளில் உளுந்து வினியோகம் நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி, மீண்டும் உளுந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த காலங்களைவிட அதிக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின்கீழ் பொருள்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டதாலும், விலைவாசி […]
இஸ்ரோவின் புதிய தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த சிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து. தமிழக மக்களுக்கு இது பெருமையான தருணம் எனவும் உங்களது சீரிய தலைமையில் இஸ்ரோ மேலும் பல பெருமைகளை அடையும் என ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தது அப்பலோ.. இரண்டு சூட்கேஸ்களில் மருத்துவ ஆவணங்களை கொண்டு சென்று விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்தது அப்பலோ நிர்வாகம். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. விசாரணை ஆணைய உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை இரண்டு சூட்கேஸ்களில் கொண்டு சென்று தாக்கல் செய்தது அப்பலோ… இதற்கு முன் தமிழக அரசு ஜெயலலிதா சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது……அந்த அறிக்கையின் […]