தமிழ்நாடு

அரசியல்வாதிகள் அறங்காவலர்களாக நியமிக்கப்படக்கூடாது… சென்னை உயர்நீதிமன்றம்.!

அரசியல்வாதிகள், கோயில் அறங்காவலர்களாக நியமிக்கப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. கோயில் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவில் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று அறநிலையத்துறை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதன் மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம், கோயில் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தது. மேலும் கோயில்களின் நிதி சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் செலவு உள்ளிட்ட கணக்குகளை மத்திய குழு தணிக்கை செய்கிறது இதனால் […]

2 Min Read
MHC Chennai

ஆர்.கே.சுரேஷ் வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பிய சம்மனை எதிர்த்து ஆர்கே சுரேஷ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு. ஆரூத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பிய சம்மனை எதிர்த்து ஆர்கே சுரேஷ் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் […]

3 Min Read
RK SURESH

33 ஆண்டு சட்டப் போராட்டம்! ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்பு.. முதலமைச்சர் பெருமிதம்!

33 ஆண்டு கால சட்டப்போராட்டத்தின் மூலம் ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பெருமிதம். 33 ஆண்டு சட்டப்போராட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது 33 ஆண்டு கால சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சென்னையில் முக்கிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சென்னை, செம்மொழி […]

6 Min Read
MK Stalin

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

வெப்பசலனம் காரணமாக  தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் இன்று  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை […]

4 Min Read
Rain

டெண்டர் முறைகேடு.! எஸ்பி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

எஸ்பி வேலுமணி தொடர்புடைய மாநகராட்சி டெண்டர் முறைகேடு விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு. அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி டெண்டர் வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க […]

4 Min Read
sp velumani

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – இபிஎஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.  கடந்த 2022ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4-இல் கிட்டத்தட்ட 10ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று, கடந்த மார்ச் 2023இல் அதற்கான முடிவு வெளியானது. அதன் பிறகு இன்னும் கலந்தாய்வுக்கு தேர்வானவர்கள் அழைக்கப்பட வில்லை. இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான […]

3 Min Read
Edapadi palanisamy

Today’s Live: தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேலுக்கு ஒய்+ பிரிவு பாதுகாப்பு..!

ஒய்+ பிரிவு பாதுகாப்பு: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேலுக்கு அகில இந்திய அடிப்படையில் ஒய்+ பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எஃப்) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பு என ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்னர். ரயில்கள் பெட்டிகள் வீசி எறியப்பட்டத்தில், உயரத்தில் செல்கிற மின்சார கம்பிகள் அறுந்து, பெட்டிகளில் […]

4 Min Read
Anupriya Patel

ஜெயக்குமார் வழக்கு.. நிராகரிக்க கோரிய மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு!

ஜெயக்குமார் நஷ்ட ஈடு கோரி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி உறவினர் கோரிக்கையை ஏற்க மறுப்பு. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நஷ்ட ஈடு கோரிய வழக்கை, நிராகரிக்க கோரிய உறவினர் மகேஷின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தன்னை பற்றிய அவதூறு பரப்பியதற்காக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க கோரி முன்னாள் ஜெயக்குமார் வழக்கு தொடுத்துள்ளார். […]

3 Min Read
jayakumar

டீக்கடையில் டீ குடித்துவிட்டு வாக்குவாதம் – 4 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்!

கடையில் பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 4 பெண் காவலர்கள் சஸ்பெண்ட். சென்னை படப்பை அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4 பெண் காவலர்களை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். மேலும் கடையில் இலவசமாக பிரெட் ஆம்லெட், ஜூஸ் கேட்டு தகராறு செய்ததாகவும் […]

2 Min Read
suspend

வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு? விசாரணை நடத்த வேண்டும்! – ராமதாஸ்

ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என ராமதாஸ் அறிக்கை.  வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு […]

8 Min Read
ramadoss

இந்த செயல் வேலியே பயிரை மேய்வது போல உள்ளது – ஓபிஎஸ்

ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், ‘திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் தான் சீரழிந்து கொண்டிருக்கிறது என்றால், ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, ஆவின் நிறுவனம் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், ஆவின் […]

3 Min Read
ops

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் – அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழ்நாட்டில் 200 கி.மீ. வரையிலான குறைந்த தொலைவு பேருந்து பயணங்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதி அமலானது. தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளில் உள்ளது போல மாநிலத்தில் 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து இனி பயணிக்கலாம். இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக […]

5 Min Read
TICKET BOOKING

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ரூ.44,800 என விற்ற ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.44,840 என விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5605 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78.000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 Min Read
Gold SilverRate

Tamil News Live Today: தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேலுக்கு ஒய்+ பிரிவு பாதுகாப்பு..!

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேலுக்கு அகில இந்திய அடிப்படையில் ஒய்+ பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எஃப்) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
Anupriya Patel

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் இருந்து விலக்கு. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுகிறது. இதனால் அரசின் உத்தரவை முறையாக பின்பற்றதாக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள […]

3 Min Read
Disabled Students

ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால் அதிர்ச்சி..! அதிகாரிகள் தீவிர விசாரணை…!

வேலூரில், ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால்  அதிகாரிகள் அதிர்ச்சி வேலூரில், ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால்  அதிகாரிகள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். பால் திருட்டு கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் இந்த விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 Min Read
aavin

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர்… தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு!

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழகத்தில் முழுவதும் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. மேலும், சென்னையில் கூடுதலாக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகிறது. இதில், பட்டப் படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியை சென்னை […]

6 Min Read
tamilnadu government

கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட.விவகாரம் ! விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் சீல்.!

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் உள்ளே பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் புகார் அளித்து இருந்தனர். மேலும், கோவில் உள்ளே செல்ல முயன்ற பட்டியலினத்தவர்களை மாற்று சமூகத்தினர் தாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து , மாவட்ட ஆட்சியர் பழனி இரு தரப்பு மக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். […]

3 Min Read
droupathi amman koil

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதிக வேலை வாய்ப்புள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். இதில், சேர விரும்புபவர்கள் 8 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் உடனே விண்ணப்பிக்காலம்.

2 Min Read
ITI

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

4 Min Read
rain tn