தமிழ்நாடு

அப்படி நடக்கவே இல்லை.. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்.!

சென்னை, அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.  நேற்று சென்னை அம்பத்தூர் ஆவின் பால் தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியாகின. இந்த சம்பவம் குறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ஆவின் பால் தொழிற்சாலையில் எந்தவித குழந்தை தொழிலாளர்களும் பணியமர்த்தப்படவில்லை எனவும், அங்கு நடந்தது 18வயதுக்கு […]

2 Min Read
Minister Mano thangaraj

இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.!

ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று வடசென்னையில் நடக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுக அரசு அறிவித்தது. இதன் தொடக்கமாக கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் […]

3 Min Read
mkstalin

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்!

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 07.06.2023 (புதன்கிழமை) முதல் மெட்ரோ இரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை […]

4 Min Read
Chennai Metro

இன்றைய (7.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

382-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. உலகின் முன்னணி பெட்ரோலிய ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா ஜூலை முதல் ஒரு நாளைக்கு மேலும் 1 மில்லியன் பீப்பாய்கள்(பேரல்கள்) எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக உறுதியளித்ததை அடுத்து ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $2க்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் […]

3 Min Read
Petrol

இதற்கு தள்ளுபடி! சென்னை மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த கட்டணத்தில் தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், வரும் 14-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை […]

3 Min Read
Chennai Metro

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு – தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கடந்த 2015ல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக, அவைக்குறிப்புகளை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவதாக சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் […]

2 Min Read
Chennai High Court

கலாக்ஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கு… ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.!

கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். சென்னை கலாக்ஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு  அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் ஹரிபத்மன் தொடுத்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

2 Min Read
Haribathman case

#BREAKING: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, போக்குவரத்துத்துறை ஆணையராக சண்முக சுந்திரத்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று, சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ரத்னாவும், புவியில் மற்றும் கனிமவளத்துறை இயக்குநராக நிர்மல் ராஜ், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குநராக சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் நியமனம் செய்து […]

3 Min Read
tamilnadu government

10 மாணவர்களுக்கு டிசி கொடுத்த விவகாரம் – விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் : மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பள்ளியில் 10 மாணவர்களுக்கு டிசி கொடுத்த விவகாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.  கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளியில் தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 10 பேருக்கு டிசி கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பள்ளி தரப்பில் பெற்றோரை அழைத்து பேசிய பின்பு தான் மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டது என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கோவை […]

2 Min Read
kovaicorp

ஆளுநரின் விமர்சனம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.!

முதல்வரின் வெளிநாட்டுப்பயணம் குறித்து விமர்சித்த ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம். உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்ற சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். மேலும் தமிழக கல்வி நிலை குறித்தும் ஆளுநர் கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் தற்போது முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவதாகவும், துணைவேந்தர்கள் மாநாட்டை தனது அரசியலுக்காக பயன்படுத்தி முதல்வரின் […]

5 Min Read
Thangam Tennarasu

ஆளுநர் பதவிக்கு தகுந்த மாதிரி அவரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து செல்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (05.06.2023) உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும் போது, அந்நிய முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார். இவரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சமீபத்தில் குழந்தைத் திருமணம் பற்றி பேசிய ஆளுநர் ரவி அவர்கள், தமிழ்நாடு சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்தோடு குழந்தைத் திருமணம் […]

6 Min Read
selvaperunthagai

எச்சரிக்கை.! முடிந்தது கத்தரி வெயில்…இனிமேல் வெப்ப அலை வீசும் – வானிலை ஆய்வு மையம்.!

கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வந்த கத்தரி வெயில் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகுமாம். இதனால், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை […]

5 Min Read
bodyheat

தமிழக எல்லையில் அரிசி கொம்பன்.! சிறப்பு அமர்வு விசாரிக்கும்.! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

அரிசிக்கொம்பன் யானை பற்றிய வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . தேனி , கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, பொதுமக்களை தொந்தரவு செய்து வந்த அரிசி கொம்பன் யானையை தமிழக வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து பிடித்துள்ளனர். அதனை நெல்லை மாவட்டம் முண்டாந்துறை புலிகள் காப்பக பகுதி கோதையாறு வனபகுதியில் விட ஏற்பாடு செய்துள்ளனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் […]

3 Min Read

ஆளுநர் பேப்பரையாவது படிக்க வேண்டும் – அமைச்சர் பொன்முடி

கல்வியில் அரசியலை புகுத்த வேண்டுமென ஆளுநர் அரசியல் செய்கிறார் என அமைச்சர் பொன்முடி பேட்டி.  விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கல்வியில் அரசியலை புகுத்த வேண்டுமென ஆளுநர் அரசியல் செய்கிறார்; தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை; அதனால் தான் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை செய்கிறார்கள்; வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு சென்றுள்ளார், அவர் ஊட்டிக்கு சென்ற பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது. ஆளுநர் பேப்பரையாவது படிக்க வேண்டும்; […]

3 Min Read
minister ponmudi

பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததையடுத்து அல்லேரி மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி…!

பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததையடுத்து, அல்லேரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி கடந்த மாதம் 29-ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே உயிரிழந்துள்ளது. இதனை தொடர்ந்து, உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து […]

3 Min Read
alleri

இவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்க வேண்டும் – விஜயகாந்த்

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கும்,வாழைகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்க வேண்டும் என விஜயகாந்த் அறிவுறுத்தல்.  தமிழகத்தில் மழை மற்றும் சூறாவளி காற்றால் சேதம் அடைந்த வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்  என்றும், கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்த விவசாயிகளுக்கு தற்போது கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், […]

3 Min Read
vijayakanth

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை. நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் அருகே பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நடேசன், அவரது மனைவி சிந்தாமணி, மகன் நந்தகுமார் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடன் பிரச்சனையால் தற்கொலையா அல்லது வேறு எதுவும் காரணங்களா என்பது குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 Min Read
death

ஐ.பி.எல் கோப்பையுடன் முதலமைச்சரை சந்தித்த சி.எஸ்.கே. உரிமையாளர்கள்!!

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியில் எம்.எஸ் தோனி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஐபிஎல் கோப்பையுடன் முதலமைச்சரை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன் சந்தித்துள்ளார். ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா […]

3 Min Read
CMOTamilNadu

தமிழகத்தில் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

மலர்விழி, தாகீர் உசேன், வீரய்யா பழனிவேல் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. தமிழகத்தில் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் 5 இடங்கள், புதுக்கோட்டையில் 3 இடங்களில், விழுப்புரம் மற்றும் தருமபுரியில் தலா ஒன்று என மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதில், குறிப்பாக தருமபுரி முன்னாள் ஆட்சியராக இருந்த மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மலர்விழி […]

3 Min Read
Anti Corruption Bureau

ஒடிசா ரயில் விபத்து – தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசனுக்கு முதல்வர் பாராட்டு..!

மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட வெங்கடேசனை பாராட்டுகிறேன் என முதல்வர்  ட்வீட். கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய NDRF வீரர் வெங்கடேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘ஒடிசா ரயில் […]

4 Min Read
MK Stalin