தமிழ்நாடு

கடலுக்கு நடுவில் அமைய உள்ள கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் – மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கருணாநிதி பேனா நினைவுச்சின்னத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த கடலுக்கு நடுவில் அமைய உள்ள கருணாநிதி பேனா நினைவுச்சின்னத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.

#DMK 2 Min Read
Default Image

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் – சசிகலா

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் என சசிகலா வேண்டுகோள். தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை திமுக தலைமையிலான அரசு உடனே வழங்கிட வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களுக்கு 01-01-2022 முதல் தரவேண்டிய 3% அகவிலைப்படி உயர்வை முன்தேயிட்டு அறிவித்து, நிலுவைத்தொகையோடு உடனே வழங்கிட வேண்டும். தேர்தலின் போது அரசு ஊழியர்களின் பாதுகாவலன் என விளம்பரம் செய்துகொண்டு, ஆட்சி […]

#DearnessAllowance 2 Min Read
Default Image

அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.

அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணி அளவில், அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

iraiyanbu 1 Min Read
Default Image

இது காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை – விஜயகாந்த்

ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம். சென்னையில் நடந்த விழாவில், ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது  காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை பணியாற்றி வருவதாக பேசப்படும் நிலையில், சென்னையில் நடந்த விழாவில், ஜனாதிபதியின் சிறப்பு […]

- 5 Min Read
Default Image

உணவுப்பொருட்கள் விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிப்பு – மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு. நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பேசிய கனிமொழி எம்பி, உணவுப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பாஜக ஆட்சியில் […]

#DMK 4 Min Read
Default Image

#BREAKING : சென்னை பரந்தூரில் 2-வது விமான நிலையம்..! – தமிழக அரசு பரிந்துரை

சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக எம்பி கனிமொழி மற்றும் சோமு  இருவரும் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.

#DMK 1 Min Read
Default Image

ஓபிஎஸ் பிரதிநிதி எந்த கட்சி என தெரியாது – ஜெயக்குமார்

ஓபிஎஸ் பிரதிநிதி கோவை செல்வராஜ் எந்த கட்சி என தெரியாது என ஜெயக்குமார் பேட்டி.  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இந்த கூட்டத்தில்,  ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் முதல் ஆளாக கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் […]

- 3 Min Read
Default Image

#BREAKING: ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல்.. கட்சி தலைவர் ஓபிஎஸ் தான் – செல்வராஜ்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயல் ஒரு கேவலமான செயல் என ஆணைய கூட்டத்துக்கு பிறகு கோவை செல்வராஜ் பேட்டி. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் கலந்து கொண்டார். இபிஎஸ் தரப்பில், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் […]

#AIADMK 7 Min Read
Default Image

தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை…

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இந்த 3 மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

Red Alert 2 Min Read
Default Image

வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது – ஆர்.எஸ்.பாரதி

வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது ஆர்.எஸ்.பாரதி பேட்டி.  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது. […]

- 2 Min Read
Default Image

#BREAKING: கனியாமூர் பள்ளி வன்முறை – கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல்!

கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிப்பு. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிக்கப்பட்டது. கைதான 5 பேரையும் 24 மணிநேரம் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சரண்குரு, கோபு, மணிகண்டன், பிரதீப் ஆகியோர் கடந்த […]

CriminalCourt 2 Min Read
Default Image

கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் – திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிப்பு.  ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இதற்கான பணிகள் […]

- 2 Min Read
Default Image

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் – கூட்டத்தில் அருகருகே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்..!

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்துள்ளனர்.  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  இக்கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் முதல் ஆளாக கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் […]

- 2 Min Read
Default Image

#BREAKING: ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி. இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுகவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலைஞர் அவர்களின் 4-வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் – 7-ஆம் தேதி […]

- 2 Min Read
Default Image

திமுக அரசுக்கு மாட்டிறைச்சி மட்டும் துவர்ப்பாக இருப்பதேன்? – சீமான்

கோயிலுக்கருகே மாட்டிறைச்சி உணவுக்கடை வைக்கக்கூடாதென யார் சொன்னது? என சீமான் அறிக்கை.  சேலம் தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சீமான் அறிக்கை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சேலம் தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த தம்பி பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக அப்பகுதியில் […]

#Seeman 7 Min Read
Default Image

சற்று முன் : கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு..!

தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், இந்த தோற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றால் பல மாணவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த நிலையில், தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட […]

- 2 Min Read
Default Image

TodayPrice:72 வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல்,டீசல்

சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,72-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 1) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Petrol Diesel Price 1 Min Read
Default Image

ஹாப்பி நியூஸ் : வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இந்திய நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 […]

#cylinder 2 Min Read
Default Image

#JustNow: ஆசிரியர்களுக்கு இனி செயலி மூலம் வருகைப்பதிவு.. இன்று முதல் அமல்!

பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வித்துறை செயலி மூலம் வருகைப்பதிவு. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களது வருகைப் பதிவை பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலி மூலம் பதிவு செய்யும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் இனி செயலி வழியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகைப் பதிவை TNSED App-ல் மட்டுமே பதிவிடும் முறை […]

#TNGovt 3 Min Read
Default Image

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்று  முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sathya Pratha Sahoo 2 Min Read
Default Image