சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,39-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும்,பெட்ரோல் விலை எப்போது சதத்தை விட்டு குறையும் என்று வாகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் […]
நாடு முழுவதும் தற்பொழுது மீண்டும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.அந்த வகையில்,தமிழகத்திலும் சென்னை,கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும்,கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்,காதாரம்,வருவாய்,காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள்,நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு […]
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையினை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு நிதி (Corpus Fund) மூலம் கிடைக்கும் வட்டித்தொகையிலிருந்து 10 ஆதிதிராவிடர்பழங்குடியினர்,மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருப்பத்தூர்,வேலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அதன்படி,இன்று காலை 9 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,டான் போஸ்கோ பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர்,அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி முதல்வர் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து,நண்பகல் 12.15 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் புதிய நகர பேருந்து […]
அரசு விழாக்களில் நிகழ்வுகளை தொகுத்து வழங்க ஆர்வமுடையவர்களுக்கு தமிழக அரசு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் தொகுத்து வழங்க ஆர்வமுடையவர்களுக்கு தமிழக அரசு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் தொகுத்து வழங்க ஆர்வமும், விருப்பமுடைய நிகழ்ச்சி தொகுப்பளார்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,484 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,484 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 736 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து […]
கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதிமுகவை பலப்படுத்த கூட பயன்படாது.தற்போது அதிமுக ஆட்சியில் இருந்து என்ன பிரயோஜனம் வரப்போகிறது என கே.பாலகிருஷ்ணன் பேட்டி. இன்று ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து உள்ளார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் தற்போது ஆட்சி அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. இது அதிமுகவை பலப்படுத்த கூட பயன்படாது.தற்போது அதிமுக ஆட்சியில் இருந்து என்ன பிரயோஜனம் வரப்போகிறது. மக்கள் மீது அக்கறை இருந்தால் […]
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதா அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த […]
சமூக நீதி என்பது பெயரளவில் விளம்பரத்திற்காக இருந்தால் மட்டும் போதாது, அது செயல்பாட்டிலும் இருக்கவேண்டும் என அண்ணாமலை ட்வீட். சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமர செய்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் […]
புதுக்கோட்டையில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர். கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் […]
தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சேலத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டு விற்பனை நடைபெற்று வருவதை காட்சி ஊடகம் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது! சேலம், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளும், ஒரு நம்பர் பரிசுச்சீட்டுகளும் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. […]
ஆசிரியர்கள் வாழ்க்கை முழுக்க போராடிக்கொண்டே இருக்க வேண்டுமா? மக்கள் நீதி மய்யம் கண்டன அறிக்கை தமிழகத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் வேலைக்காகக் காத்திருக்கும்போது, மிகக் குறைந்த சம்பளத்தில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘கொரானாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் குறைந்துள்ளதாக தேசிய சாதனை ஆய்வு அமைப்பு, புள்ளிவிவரங்களுடன் […]
பூ ராமு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் ட்விட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இந்த படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பூ ராமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை அரசு […]
அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மனசாட்சியோடு நிறைவேற்றாமல் இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? என டிடிவி தினகரன் ட்வீட். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், இதனை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள […]
தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 60 ஆக அண்மையில் உயர்த்தப்பட்டது.இந்நிலையில்,விருப்ப ஓய்வு பெரும் அரசு ஊழியர்களின் வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது. முன்னதாக,54 வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் பணிபுரிந்ததாக கருதி, அதனடிப்படையில் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு […]
தமிழகத்தில் வரி ஏய்ப்பு குறித்து வணிகவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “கடந்த ஏப்ரல் 28,2022 அன்று நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான வணிக வரித் துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்போது வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார்: “வணிகவரித்துறையில் வரி ஏய்ப்பினைத் தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.குறிப்பாக,வரி ஏய்ப்பு செய்வோர் […]
தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் ராமு.இதனால் இவர் பூ ராமு என்று அழைக்கப்பட்டார்.இந்த படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள்,பரியேறும் பெருமாள்,கர்ணன்,சூரரை போற்று போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றார். இந்த நிலையில்,நடிகர் பூ ராமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டதையடுத்து,சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.அவரது மறைவு […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,38-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும்,பெட்ரோல் விலை எப்போது சதத்தை விட்டு குறையும் என்று வாகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் […]
நாடு முழுவதும் தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக,தமிழகத்தை பொறுத்தவரை சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இத்தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் அதிகரித்து வருகின்றது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனால்,பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல்,சமூக இடைவெளி கடைப்பிடித்தல்,முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு […]