மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில்,சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி,தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும்.உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரும் இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையை […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,ஈரோடு,தருமபுரி,கிருஷ்ணகிரி,சேலம்,நாமக்கல்,திருச்சி, பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும்,நாளை தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,நாளை மறுநாள் (17.06.2022) தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி,விழுப்புரம்,திருவண்ணாமலை,நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர்,திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 332பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 332 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 153 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு […]
விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதிரடி ஆக்சன் […]
கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்றுப் பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நாளை அதிகாரிகளுடன் […]
கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை என அண்ணாமலை ட்வீட். பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களை வெளியிட்டதையடுத்து, திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை. கருப்பு பட்டியலில் வைக்கப்பட […]
கொடைக்கானலில் நாளை முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 10 டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும். இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த […]
தமிழ்நாட்டில் பாஜக வளர வாய்ப்பே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு விமர்சனம். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு, தமிழகத்தில் பாஜக வளர வாய்ப்பே இல்லை. பாஜக வளரும் என்பது பகல் கனவு, அது ஒருபோதும் நடக்காது என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றசாட்டினார். கடந்த 8 ஆண்டுகளில் பாதமர் மோடி கூறிய வாக்குறுதிகளில் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை என்றும் பல கோளாறுகளை வைத்துள்ள பாஜக […]
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து மநீம கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது. வெவ்வேறு […]
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் வலியுறுத்தினார்கள் என ஜெயக்குமார் பேட்டி. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாகவும், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் […]
‘777 சார்லி’ என்ற கன்னடத் திரைப்படம் கடந்த ஜூன் 10ஆம் தேதி ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரு மனிதனுக்கும் அவனது நாய்க்கும் இடையிலான பிணைப்பைக் கொண்டியிருக்கும் இந்த படம் அனைத்து இடங்களிலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருவதால், பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ரக்ஷித் ஷெட்டி நடித்த இப்படம் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பணிகளில் இருந்து ஓய்வு […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய […]
அதிமுகவின் பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆவின் முறைகேடு வழக்கில் ஜாமீன் நிபந்தனையால் வெளியூர் செல்ல முடியாத நிலையில் ராஜேந்திர பாலாஜி இருப்பதால், அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக ராஜேந்திர பாலாஜி […]
வாகன எண்ணை கூறினால், அது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமா, ஊழியருடைய வாகனமா இல்லை வழக்கமான போட்டோஷாப் வேலையா என சொல்ல இயலும் என செந்தில் பாலாஜி ட்வீட். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவாகனத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, கிறித்தவமயமான TNEB என் அப்பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏதோ காரணங்களால், வாகன பதிவு எண்ணை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணன் எச்.ராஜா. […]
அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை என்பதுதான் பிரச்சினை என ப.சிதம்பரம் பேட்டி. இன்று 2-வது நாளாகவும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து, காங்கிரஸ் முழுவதும் போரட்டம் நடத்தி வருகின்ற்னர். இந்த நிலையில், இதுகுறித்து ப.சிதம்பரம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தை மதிப்பது இல்லை. கடந்த 4,5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திருவண்ணமலையில் வேங்கைக்கால் பகுதியில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக தற்காலிக தடை விதித்திருந்தது.பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்,வேங்கைக்கால் பகுதியில் கருணாநிதி சிலை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்திருந்தது. மேலும்,சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து […]
தமிழகத்தில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி, கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு,தருமபுரி,கிருஷ்ணகிரி, சேலம்,நாமக்கல்,திருச்சி,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.மேலும்,சென்னையை பொறுத்தளவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,ஒரு […]
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு,பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து,வரும் 23-ஆம் தேதி நடக்கும் கூட்டத்திற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை […]
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில்,அப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும்,அதன்படி 10% இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Msc biotech படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் […]
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க அழைப்பு இல்லை என தகவல். சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக […]