பிரதமரின் 10 லட்சம் வேலை – 18 மாத காலக் கெடு அறிவிப்பு சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 […]
ஆசிரியர்களுக்கு வரும் 18-ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்த 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்புக்கு 20ம் தேதியும், 11-ஆம் வகுப்புக்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறந்ததை அடுத்து, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், […]
போதிய ஊழியர்களோடு பேருந்துகள் இயங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்துள்ள இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்து அதை அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இந்தக் […]
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்ட நபரை கைது செய்த போலீசார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பிச்சையா என்பவர் இந்த நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார். இதனையடுத்து, அவரது மகன் சுப்பையா தனது தந்தை தவறுதலாக இந்த இடத்தை தானமாக […]
சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போஸ்டர் கிழிக்கப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டம். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்திய நிலையில், யார் அந்த ஒற்றை தலைமை என்பதை கட்சி குடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். ஒன்றை தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி தான் என்று ஒருபக்கம் அவரது ஆதரவாளர்களும், மறுபக்கம் ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக இருக்க […]
பொதுவாக கோயில்களில் விஐபிக்கள் தரிசனம்,முக்கிய பிரமுகர்களுக்கு தனி பாதை,தனி மரியாதை ஆகியவை இருந்து வரும் நிலையில், கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே என்றும் மாறாக மனிதனுக்கு அல்ல எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சண்டிவீரன் கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அஅதில் சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது சட்டத்திற்கு எதிரானது […]
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு. தகவல் தொழில்நுட்பவியல் துறை – தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது […]
மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்த உத்தரவு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் திடீரென அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைதொடர்த்து, கடந்த ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட […]
வளிமண்டல கீழடுக்கு தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 18 வரை நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு, சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி,நாமக்கல்,கரூர்,திருச்சி,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும்,ஜூன் 19 ஆம் தேதி தமிழகத்தின் சில மாவட்டங்களில் […]
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது.இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் […]
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவிப்பு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் ஊக்கத்தொகை தரும் திட்டத்திற்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இந்த திட்டத்தை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி […]
வரும் 23-ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில்,சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து,அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “இந்த கூட்டத்தில் […]
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஆலோசனை. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாகவும், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் […]
கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தகவல். தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். இதனிடையே, தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் […]
மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அரசு உத்தரவு. தமிழகத்தில் 48 முதுநிலை திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி […]
கிராம ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் அமர்வுபடியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியினை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப்படித் தொகை பத்து மடங்காகவும்,கிராம ஊராட்சித் […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET) கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.அதே சமயம்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே,சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 26 வரை கால […]
பிரபல தீம் பார்க் நடத்தி வரும் நிறுவனமான MGM குழுமம் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.வரி ஏய்ப்பு புகார் காரணமாக சென்னை, பெங்களூரு,நெல்லை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சற்று முன்னர் முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக,MGM தொடர்புடைய நட்சத்திரவிடுதி,கேளிக்கை பூங்கா,அலுவலகம் மற்றும் ஊழியர்களின் இல்லங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சோதனைக்கு பின்னர் முறையான […]
கொடைக்கானலில் இன்று முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,10 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும்.இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,25-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல், டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல,டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ .96.72 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ .89.62-க்கு விற்பனை. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. […]