அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட நபர்…! போலிஸாரின் அதிரடி முடிவு…!
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்ட நபரை கைது செய்த போலீசார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பிச்சையா என்பவர் இந்த நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார். இதனையடுத்து, அவரது மகன் சுப்பையா தனது தந்தை தவறுதலாக இந்த இடத்தை தானமாக வழங்கி விட்டார். எனவே இந்த இடம் எனக்கு சொந்தமானது என கூறி பள்ளிக்கு அடிக்கடி பூட்டு போட்டு பிரச்னை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல பள்ளிகள் திறப்பதற்காக ஆசிரியர்கள் வந்துள்ளனர். அப்போது பூட்டு போட்டு இருந்ததால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெளியிலேயே நின்றுள்ளார். இதுகுறித்து ஆசிரியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில், சின்னையா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.