சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருடன், துணை ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு. ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி சந்தித்து ஆலோசனை […]
தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகம் இருந்து வந்தது. கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் […]
குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து. சென்னை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கோயில் நிலத்தில் குயின்ஸ்லேண்ட் பூங்கா இருப்பதாக கூறி, இதனை காலி செய்யுமாறு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுதொடர்பாக குயின்ஸ்லேண்ட் நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூங்கா அமைத்துள்ள இடம் தொடர்பான நில விவகாரம் விசாரணை, நில […]
அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் அவர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும், நகமும் சதையும் போல ஒற்றுமையாக உள்ளனர் என பேட்டி. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசித்தாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் எம்பி, வகைச்செல்வன், வளர்மதி, செம்மலை உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், ஆர்பி உதயகுமார், பொன்னையன் உள்ளிட்ட தீர்மானக்குழு ஆலோசனையில்கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி,கோயம்புத்தூார்,தேனி, திண்டுக்கல்,திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,ஈரோடு,நாமக்கல்,சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதைப்போல நாளை நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி,திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 476 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 221 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தது.ஆனால்,தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,தமிழகத்தில்தான் கொரோனா பரவல் குறைவாக பரவுகிறது எனவும் எனினும் பொதுமக்கள் அனைவரும் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் […]
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனையை முடித்துவிட்டு ஜெயக்குமார் புறப்பட்டபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வளர்மதி, சிவி சண்முகம் எம்பி, வகைச்செல்வன், செம்மலை, ஆர்பி உதயகுமார், பொன்னையன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், ஆலோசனை கூட்டம் […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப கொடுத்து விட்டு,பாட்டிலுக்கு கூடுதலாக பெறப்பட்ட ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், விளைநிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கொடைக்கானலில் உள்ள 10 […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு. தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை (ஜூன் 17 ஆம் தேதி) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் […]
வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி,ஜூலை 3 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் காலை 9.30 மணி முதல் 5 மணி வரை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.மேலும், உள்ளாட்சியிலும் நல்லாட்சி உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுவார்கள் என்றும்,திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி […]
பொதுக்குழுவுக்கு தடைகோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 தலைமை பொறுப்பும் தவறானது. கட்சியில் பொதுச்செயலாளர் பதவி மட்டும் தான் அதிமுகவின் உண்மையான தலைமையாக இருக்க வேண்டும். இதனால் அவர்கள் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் கிடையாது என்றும் பொதுக்குழு குறித்து அவைத்தலைவர் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் எனவும் திண்டுக்கல்லை சேர்த்த சூரிய மூர்த்தி […]
தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய முதல் 3 மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதக்கங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கினார். அதன்படி,முதல் இடம் பிடித்த கோவை மாவட்டத்துக்கு தங்கப்பதக்கமும், இரண்டாவது இடம் பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வெள்ளிப் பதக்கமும்,3-வது இடம் பிடித்த கரூர் மாவட்டத்துக்கு வெண்கலப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.இதனை அந்தந்த […]
திமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் எம்பி, வகைச்செல்வன், வளர்மதி, செம்மலை உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், ஆர்பி உதயகுமார், பொன்னையன் உள்ளிட்ட தீர்மானக்குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் இனி அதிமுகவில் […]
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களால் 2021 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் “மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும்,மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து,இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் அனைத்து திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் மற்றும் திருக்கோயில்களுக்கு […]
வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து புலிகள் காப்பக இயக்குனர் உத்தரவு. மலைபிரதேசமான வால்பாறையில் இதமான காலநிலை நிலவும். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வால்பாறை வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அவ்வப்போது, வால்பாறையில் சுற்றுலாவை முன்வைத்து சில சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் […]
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆன்லைன் லோன் ஆப் வைத்திருந்தால் அதனை உடனே நீக்கி(delete) விடுமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் டிஜிபி அவர்கள் கூறியதாவது: “ஆன்லைன் முறைகேடு பற்றி சமீபகாலமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக,ஆன்லைனில் லோன் வாங்குவதற்கான லோன் ஆப்கள்(loan app) நிறைய வந்துள்ளன.அந்த லோன் ஆப்களை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன் உங்களை லோன் அப்ளை செய்ய கொள்வார்கள்.அப்போது உங்கள் புகைப்படம் மற்றும் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,26-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல,டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.62-க்கு விற்பனை. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.109.27 மற்றும் டீசல் லிட்டருக்கு […]
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது.இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வளிமண்டல வெப்பச்சலனம் காரணமாக,இன்று முதல் ஜூன் 18 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு,சேலம்,கிருஷ்ணகிரி,தருமபுரி, நாமக்கல்,கரூர்,திருப்பத்தூர்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் ட்வீட். நேற்று அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது ஜூன் 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]