தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி,கோயம்புத்தூார்,தேனி, திண்டுக்கல்,திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,ஈரோடு,நாமக்கல்,சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
unknown nodeஅதைப்போல நாளை நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி,திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
unknown nodeசென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
unknown nodeஇன்று இலட்சத்தீவு பகுதி,கர்நாடகா,கேரளா,தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள்,குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும்,நாளை முதல் 3 நாட்களுக்கு இலட்சத்தீவு பகுதி,கர்நாடகா,கேரளா,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்,தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
unknown node