அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை என்கிறார் அண்ணாமலை என ஆளூர் ஷாநவாஸ் ட்விட். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார். அப்போது பேசிய அவர், இந்த ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது […]
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஜூன் 19) மாலை 5 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி மைதானத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் […]
மலைகள் அதிகமுள்ள மாவட்டங்களில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் மலைப்பகுதி அதிகமுள்ள 7 மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஓராண்டு காலம் பணியாற்றிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில் […]
அதிமுகவின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன் என உ. தனியரசு பேட்டி. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவில்லை என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 40 மாவட்ட செயலாளர்களில் ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறு யாரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவில்லை. திட்டமிட்ட சூழ்ச்சியை, வஞ்சகத்தை நடத்தி […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என அமைப்பு செயலாளர் பொன்னையன் பேட்டி. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், வைகை செல்வன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்னையன், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து கட்சியின் தலைமை […]
மட்டரக அரசியல்வாதிகள் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என செந்தில்பாலாஜி பேட்டி. அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ட்சி மாறியதும் நீங்கள் முதலில் கைது செய்யப்படுவீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சில பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய […]
இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும் என மக்கள் நீதி மய்யம் கட்சி ட்வீட். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்து மநீம ட்விட்டர் பக்கத்தில், ‘பள்ளிகளில் பரவும் சா`தீ’… தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் […]
ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு […]
ஓபிஎஸ் அனுமதியின்றி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் பேட்டி. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்களுடன் 4-ஆவது நாளாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்டோர் பபங்கேற்றனர். இந்த நிலையில், ஓபிஎஸ்-வுடனான ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் நேரத்தில் 552 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,வருகின்ற திங்கட்கிழமை(ஜூன் 20) முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற […]
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதன்காரணமாக,சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது நாளாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.ஆரணியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்ற நிலையில்,சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில்,துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில்,சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் நாளை தனியாக ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள […]
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. அந்த வகையில்,நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்:”பிரதமர் மோடி வலியுறுத்தியதால்,முன்னதாக அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டேன் என்றும் துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.இதனிடையே,சேலம் சென்றிருந்த இபிஎஸ்-யும்,அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானக் […]
ஒருங்கிணைப்பாளர் பொருப்பியிலிருந்து ஓபிஎஸ், இபிஎஸ் விளக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி பேட்டி. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் வேதனை அளிக்கிறது. எதோ விபத்தில் ஓ.பன்னீசெல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பொறுப்புக்கு வந்துவிட்டனர். அந்த விபத்தில் வந்தவர்கள் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் நாங்கள் எல்லாரும் ஒதுங்கி இருக்கிறோம். ஆனால், தற்போது கட்சி பின்னடைவு அடைந்துள்ள நிலையில், தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் […]
தங்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், தங்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தை போல் சென்னை உயர் நீதிமன்றம் […]
சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை. ஒற்றை தலைமை பிரச்சனை அதிமுகவில் வெடித்துள்ள நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆரணியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்ற நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை விஸ்வரும் […]
திருக்கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு. திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுவிலை திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும் என்று 2022-2023-ம் ஆண்டின் சட்டமன்ற போவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிருந்தார். இந்த நிலையில், 48 முதுநிலை திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் […]
சென்னை:22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.இந்த நிலையில்,தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில்,தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி,இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,சவரனுக்கு ரூ.160 உயர்ந்து,ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 […]
தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானர்.மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,சென்னை வியாசர்பாடியில் உள்ள இல்லத்தில் ஆசிரியர் இளமாறன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.மேலும்,இளமாறன் அவர்களின் மறைவு காரணமாக அவரது குடும்பத்தினருக்கு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவரும், ஆசிரியர் சமுதாயத்தின் நலனிற்காக தொடர்ந்து போராடி வந்த களப்போராளியுமான திரு. பி.கே.இளமாறன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார். […]
பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை மாவட்டம்,மசக்காளிப்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்,பாஜக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில்,தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள தமிழக அரசு மாறும்போது முதல் நாளே,முதல் ஆளாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: “தமிழக மின்சார […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்ட நிலையில்,வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில்,”அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் செயல்படும். எனவே,தங்கள் பகுதிகளில் உள்ள […]