நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பட்டன் வசதி கூடிய 500 பேருந்துகளின் சேவை தொடக்கம். நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதியுடன் கூடிய 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி […]
WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் போட்டி நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு. சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், உலக மகளிர் டென்னிஸ் போட்டித்தொடரை நடத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் […]
தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், வேலைக்காக தங்கள் சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் 76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில், 2022-04-30 வரை வேலை வாய்ப்பிற்காக பதிவுதாரர்களது விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு வேலைக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 35,67,000 பேர், பெண்கள் 40,67,820 பேர், மூன்றாம் பாலினம் […]
கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாததற்கு காரணம். கடந்த வாரம் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வை 1.18 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை. 1.18 லட்சம் மாணவர்கள் பொது தேர்வு ஏன் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதன்படி, கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பங்கேற்காததற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை திருமணம், ஐடிஐ, பாலிடெக்னீக் படிப்புகளில் […]
அணுசக்தி துறை, கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அணுசக்தி துறை, கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்தது. இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், அணுசக்தி துறை எரிபொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் திருமிகு டாக்டர் ஆர். […]
திருவாரூர் செம்படவன்காடு கிராமத்தில் சந்திரபோஸ் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. திருவாரூர் மாவட்டம் செம்படவன்காடு கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் இருசக்கர வாகனம் தீப்பிடித்துள்ளது. இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் தீயில் எரிந்து சேதமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். தலைநகர் டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள முண்ட்கா ரயில் நிலையம் அருகில் உள்ள 4 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்தது. இதனையடுத்து 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன. இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்ட 60 முதல் 70 பேர் […]
பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக மையம் கட்டடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பிரியாணி திருவிழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிகளுக்கு மட்டுமே அனுமதி […]
ஆம்பூரில் அரசு சார்பில் நாளை நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு. திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சர்ச்சை எழுந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட […]
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. சென்னையில் 14-ஆவது ஊதியம் ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துக்கு தொழிலாளர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார். 8 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என தொழிற்சங்கம் கோரிக்கை வைத்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத […]
இலங்கைக்கு பொருட்கள் அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து உத்தரவு. இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த பொருள்களை அனுப்பி வைப்பதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம். பிரதமர் மோடி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நீதிபதிகள் நியமனம், தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைத்தல், தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல் ஆகிய கோரிக்கைகள் முன்வைத்து, இதுதொடர்பாக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசார பிரதிநித்துவம் […]
தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுவதால் அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் […]
மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை அனுமதிக்காவிட்டால், இலவசமாக வழங்குவோம் என தலித் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளது. பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக […]
நேற்று காலை ஆந்திர கடலோரப்பகுதியில் நிலவிய அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மசிலிப்பட்டனம் அருகே கரையைக் கடந்தாலும்,மசிலிப்பட்டணத்திற்கு மேற்கே தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது எனவும்,மேலும்,இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே பகுதியில் நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக,தமிழகத்தில் வருகின்ற 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை, திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,சேலம்,ஈரோடு,கரூர்,நாமக்கல்,திருச்சி,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் […]
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென என ஜாக்டோ ஜியோ அமைப்பு கோரிக்கை. தமிழகத்தில் தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்ட சாத்தியமற்றது என தமிழக அரசு கூறியதற்கு, அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து, […]
ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரம் ஆதீனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசத்தின் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ராஜப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த […]
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் […]
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போக்குவரத்து துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி,சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் இணை ஆணையர் தலைமையில் நடைபெறும் இன்று கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும்,நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வரும் நிலையில் ஆட்டோவில் மீட்டர் பொருத்தி இயக்குவது தொடர்பாகவும்,கட்டணம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.